வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
-------------------------

கூடு விட்டு கூடு என்ற தலைப்பில் இந்த பகுதியில் நான் பார்த்து, ரசித்த காட்சிகள், படித்து ரசித்த சிறுகதை, கட்டுரை, புத்தகங்கள். தினசரி சந்திக்கும் மக்களைப் பற்றியும் எழுதலாம் என்று இருக்கேன். இந்த தொடர் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்...

சுஜாதா தேசிகன்

 
     
     
     
   
ஆசிரியர் பற்றி:
1
 
   
 

சுஜாதா தேசிகன்

"தேசிகன் என் கதைகளில் ஒரு 'அத்தாரிட்டி' என்று கூட சொல்லலாம். பல சமயங்களில் நான் எழுதிய
கதைகளைப் பற்றிய சந்தேகங்களை நானே அவரிடம் கேட்பேன். இந்த வருசத்தில், இன்னப பத்திரிகையில்
எழுதியது என்று தெளிவாகத் தகவல் கொடுப்பார். மேலும் நான் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் என்னிடம் இல்லை, தேசிகனிடமிருக்கிறது. புத்தக வடிவில் இன்னும்வராத கட்டுரைகள் கூட வைத்திருக்கிறார்.

ஓர் எழுத்தாளனுக்கு இவ்வகையிலான வாசகர்கள் அமைவது அதிர்ஷ்டமே!" என்று தமிழுலகம் கொண்டாடும் எழுத்தாளர் சுஜாதா அவர்களிடம் பாராட்டுப் பத்திரம் வாங்கியவர் தேசிகன். பெங்களூரு மாநகரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணி புரிந்துக் கொண்டிருந்தாலும், தொடர்ந்து இலக்கியத் துறையில் தனது முத்திரையை பதித்து வருபவர். சிறுப் பத்திரிகை மட்டுமல்லாது வெகுஜனப் பத்திரிகைகளிலும் தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருபவர்.

1995 ஆம் ஆண்டில் tamil.net எனும் வலைப்பக்கத்தை தொடங்கி கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். தற்போது http://www.desikan.com/
எனும் அவருடைய சொந்த இணையதளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

 

 
 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கூடு விட்டு கூடு TS சுஜாதா தேசிகன் தொடர்கள் வாயில்


நீருக்குள் மூழ்கிடும் தாமரை...

சுஜாதா தேசிகன்  

சிவசமுத்திரம் பெங்களூரிலிருந்து 130 கீமீ தூரத்தில் மாண்டையா மாவட்டதில் இருக்கிறது. கூகிளில் தேடியபோது இரண்டு வழிகள் இருப்பது தெரிந்தது. ஒன்று கனகபுரா மார்கமாகச் செல்லும் வழி. இன்னொன்று மைசூர் நெடுஞ்சாலையில் செல்லும் வழி. சோமநாத்பூர் சென்ற போது கனகபுரா மார்க்கம் ஒரு மார்க்கமாக இருந்ததால், மைசூர் வழியையே தேர்ந்தெடுத்து, வழக்கம்போல காமத் லோகருச்சி ஹோட்டலில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு சென்றடைந்த போது மதியம் மணி பன்னிரண்டு.

சிவசமுத்திரம் பற்றி நிறைய தகவல்கள் கூகிளில் கிடைக்கிறது. அதனால் அதைப் பற்றிச் சொல்லப் போவதில்லை. அருவியைப் பார்க்கப் போனபோது கையில் தின்பண்டங்கள் இல்லாத டம்மியாக இருந்தது அங்கிருந்த குரங்குகளுக்கு ஏமாற்றம். அருவியில் தண்ணீர் கம்மியாக வந்துகொண்டிருந்தது எங்களுக்கு ஏமாற்றம். திரும்பிப் போகும்போது மாடு ஒன்று மூச்சா போய்க்கொண்டு இருந்தது. "சிவசமுத்திரத்தைவிட மாடு மூச்சா அதிகமா இருக்கு," என்று குடும்பத்தினர் கமெண்ட்.

போகும் வழியில் நிறைய தாமரைக் குளங்களைப் பார்க்க முடிந்தது. ஏதாவது குளத்தினருகே வண்டியை நிறுத்தி பூவைப் படம்பிடிக்கலாம் என்று இறங்கியபோது அடுத்த ஏமாற்றம். அந்தக் குளத்தில் பார்த்து ஒரு தாமரை கூட இல்லை. அதிக நேரத் தேடலுக்குப்பின் ஒரே ஒரு தாமரை கண்ணில் பட்டது.

தாமரை பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் தாவரம். தாமரை விதைகள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் கூட முளைக்கும் தன்மை உடையவையாம். பெருமாளின் தொப்புளிலிருந்து மேலே வரும் தாமரையில் உலகையே படைக்கும் பிரம்மன் குடிகொண்டு இருப்பதால், தாமரைக்கு என்றும் ஏற்றம் தான். அவன் மனைவிக்கு வெண்தாமரையும், திருமகளுக்கு செந்தாமரையும் என்பதால் தாமரை கூடுதல் விசேஷம் பெறுகிறது.

படம்: தேசிகன்

ஆழ்வார்கள் பாடல்கள் தொடங்கி, முந்தாநாள் நாகேஷ் படத்தில் வரும் 'தாமரைக் கன்னங்கள்', நேற்றைய பாரதிராஜாவின் 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே', இன்றைய கௌதம் மேனனின் 'நீருக்குள் மூழ்கிடும் தாமரை' வரை...தாமரை கவிஞர்களுக்குக் கைகொடுத்துவருகிறது. வெறும் தாமரை பெண்பால், அதனுடன் கனியோ கண்ணனையோ சேர்ந்தால் தான் அது ஆண்பால்.

ஆழ்வார் பாடல்கள் பலவற்றில் தாமரை மலர், தாமரைக் காடு, தாமரைக் குளம், தாமரைத் தடாகம், தாமரை இலை உவமைகளாக வருகின்றன. ஆண்டாள் அருளிய திருப்பாவை 22 ஆம் பாடலில் வரும் "கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே" என்ற ஒரு வரியில் சலங்கையின் மணியைப் போல, பாதி திறந்த தாமரைப்பூ போல என்ற இரண்டு உவமைகளை பலமுறை படித்து வியந்திருக்கிறேன்.

ஸ்ரீரங்கம் தாயார் சன்னதி வாசலில் வாழை இலையில் தாமரை பூ, தண்டுடன் விற்பார்கள். கையில் கொடுக்கும் போது இதழ்களை விலக்கி மலர வைத்துக் கொடுப்பார்கள். ஒரு முறை சென்னை அன்னபூர்னா ஹோட்டலில் வித்தியாசமான தயிர்ப் பச்சடி சாப்பிட்டேன். பரிமாறியவரிடம் விசாரிக்க, அவர் சொன்ன பதில் "தாமரைத் தண்டு பச்சடி". தாமரைத் தண்டிலிருந்து திரி எடுத்து விளக்கேற்றினால் நல்ல பலாபலன் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

"தாமரை இலைத் தண்ணீர் மாதிரி" என்று பற்றற்ற தன்மைக்கு இன்றும் உவமையாக சொல்லுகிறார்கள். ''தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னிக்கும் சண்டையே வந்ததில்லை' என்று சினிமா கவிஞர்கள் இதையும் விட்டுவைக்கவில்லை. இதை இன்னும் எப்படியெப்படியோ உவமையாக்கியவர்கள் ஏன் ஒட்டாமல் இருக்கிறது என்று தாமரை இலைமேலிருக்கும் தண்ணீர் போலவே எழுதாமல் நழுவிவிட்டார்கள்.

ஆனால் ஆராய்ச்சியாளர்கள் விடவில்லை. மழைகாலத்தில் கார்களின் கண்ணாடியில் தண்ணீர் ஒட்டாமல் இருக்க கண்ணாடியில் தடவ ஒருவிதமான ஸ்பிரிட் கிடைக்கிறது. அதைத் தடவுவதால் கண்ணாடி மீது எண்ணெய்மாதிரி ஒரு படலம் பரவி, தண்ணீர் நிற்காமல் உருண்டு ஓடிவிடும். தாமரை இலைகளிலும் இதே மாதிரி மெழுகுபடலம் தான் தண்ணீரை ஒட்டவிடாமல் உருட்டி விடுகிறது. மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் இலைகளின் மேல் இருக்கும் மெழுகு சீராக இல்லாமல் அக்குபஞ்சர் செருப்பில் இருப்பது மாதிரி குண்டும் குழியுமாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

இன்னும் கொஞ்ச நாளில் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை நாம் துடைக்க வேண்டாம். தாமரை இலைத் தத்துவத்தின் அடைப்படையில் தண்ணீர் ஒட்டாமல் அதுவே துடைத்துக்கொள்ளும். மழைநாளில் மூக்குக்கண்ணாடிக்கு இது முக்கியத்தேவையாக நான் கருதுகிறேன்.

- 0 - 0 - 0 -

சில சமயம் கட்டுரை தொகுதியை படிக்கும் போது "அட இது சிறுகதை மாதிரி இருக்கிறதே!" என்று எண்ணத்தோன்றும். சுஜாதா எழுதிய 'அப்பா அன்புள்ள அப்பா' என்ற கட்டுரையில் சிறுகதையின் வடிவம் இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஏன் அவரே கூட இதை பற்றி எழுதியிருக்கார். சில மாதங்கள் முன் என் இசை அனுபவத்தை பற்றி கட்டுரை எழுத ஆரம்பித்து அதை கல்யாணி என்ற சிறுகதையாக மாற்றினேன். சில பேர் எழுதும் சிறுகதை கட்டுரையாக இருக்கும், அவர்களை விட்டுவிடலாம்.

சமீபத்தில் கிரேஸி மோகன் புத்தகத்தில் அப்படி ஒரு சிறுகதை எனக்கு கிடைத்தது.

கிரேஸி மோகன் எழுதியவற்றில் உங்களுக்கு பிடித்தது எது என்றுகேட்டால் எனக்குச் சொல்லத் தெரியாது. அவர் எழுதிய பல கட்டுரைகளைப் படித்திருக்கிறேன் ஆனால் எதுவும் நினைவில் இல்லை. அந்த சமயத்தில் சிரித்துவிட்டு மறந்துபோய்விடும். சில வருடங்களுக்கு முன் வாங்கிய, "ஃபைவ் ஸ்டார் பலகாரக் கடை" என்ற நகைச்சுவைக் கட்டுரைத் தொகுதியைப் சில நாட்களுக்கும் முன் படிக்க ஆரம்பித்தேன். மூன்றாம் கட்டுரைக்குப் போகும்போது முதல் கட்டுரை மறந்துவிடும். வரிசையாகப் படித்துக்கொண்டு வரும்போது, "சௌக்கிய மன்னன் பட்டப்பா" என்ற கட்டுரையில் முதல் இரண்டு மூன்று பகுதிகளை நீக்கிவிட்டு, "சென்ற மாதம் சௌக்கிய மன்னன் பட்டப்பாவை ஒரு திருமண மண்டபத்தில் சந்தித்தேன்" என்ற வரியில் ஆரம்பித்து "பாகிஸ்தான் அம்ப்பயர்ஸ் ரொம்ப அழுகுணி ஆட்டம்ப்பா..." என்ற வரியில் முடித்தால் இது அற்புதமான சிறுகதை.

கடைசிக்கு முன் பகுதியைத் தருகிறேன், கதையை யூகிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

"திருமண மண்டபத்தில் பட்டப்பா என்னை பார்த்து, "டேய் கராச்சி டெஸ்ட் மாட்ச் பார்த்தியா?" என்று கேட்டான். நான் ஆபீசுக்குச் செல்வதால் திங்கள், செவ்வாய் போன்ற வேலை நாட்களில் டிவி பார்க்க முடியாது என்று அவனிடம் கூறினேன்".

"சொந்தமாக டிவி வச்சுண்டுருக்கே! என்ன பிரயோஜனம்? கிரிக்கெட் மாட்ச் பார்க்க முடியலை. அஞ்சு நாளும் நான் கீழ் வீட்டு டிவியில் அமர்க்களமா பார்த்தேன். ஒரு தொந்தரவு கிடையாது. கீழ் வீட்டுப் பசங்கள்ளாம் ஸ்கூலுக்கு போயிட்டாங்க...மாமா ஆபீஸுக்குப் போயிடுவார்..." பட்டப்பா சொல்லச் சொல்ல எனக்கு நாபிக்கமலத்திலிருந்து உதித்த வயிற்றெரிச்சல் வாய் வழியாகப் புகையாக வந்தது".

அடுத்த முறை கிரேஸி மோகனை பார்த்தால் இதை பற்றி பேச வேண்டும்.

- 0 - 0 - 0 - 0

சென்ற மாதம் புத்தகக் கடைக்குச் சென்ற போது, ஆங்கிலப் புத்தகம் ஒன்றை மனைவிக்குத் தெரியாமல் வாங்கினேன். பில் போடும் போது அந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு, "உங்க கூட இனிமே கடைக்கே வர கூடாது" என்று நேற்று வரை கடைப்பிடித்துக்கொண்டு இருக்கிறார். நான் அந்த புத்தகத்தின் இரண்டாம் பாகத்தைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். பல வில்லங்கமான நான் வெஜ் கேள்விகளும் அவற்றின் பதில்களுக் இருக்கின்றன. அதில் இருக்கும் சில வெஜிடேரியன் கேள்விகளும் பதில்களும் சில வாரங்களுக்குச் சொல்லுகிறேன். இந்த வார வெஜிடேரியன் கேள்வி; நிஜமாகவே வெஜிடேரியன். கீரை பற்றி.

கீரை சாப்பிட்ட பின் நமக்கு நாக்கு பல்பம் சாப்பிட்ட மாதிரி இருக்கிறதே ஏன்?

கீரையில் இருக்கும் கால்சியம் ஆக்சலேட் (Calcium oxalate) தான் இதற்குக் காரணம். நம்ப முடியவில்லை என்றால் அடுத்த முறை வீட்டில் தயிர் சாதம் சாப்பிடும் போது ஊறுகாய்க்கு பதில் கீரையுடன் சாப்பிடுங்கள். தட்டை நீங்கள் கழுவும்போது பிசுக்கைப் போக்க சபீனா தேவைப்படாது. எல்லாம் கால்சியம் செய்யும் வேலை!.

கூடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

17 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

சிவசமுத்திரம் அருவியில் எப்போதும் செப்டம்பர் மாதங்களில் நல்ல அளவில் தண்ணீர் கொட்டும்.. முயற்சித்து பாருங்கள்..நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.. கிரேசி மோகன் நாடகம் மட்டுமே பார்க்கமுடியும். அவர் புத்தகங்கள் நான் ஒன்றிரண்டு படித்திருக்கிறேன். இல்லை. படித்தால் நினைவில் நிற்பதும் இல்லை. ஆனால் நல்ல நகைச்சுவை அருவிப் போல் இருக்கும். அவரது எழுத்துகள்.

அனுப்பியவர் ப்ரசன்னா on Thursday, 15.07.10 @ 09:34am

oh.. keeraikkul idhu thani mettaraa? nalla irukke.. interesting one.

அனுப்பியவர் bharathi on Thursday, 15.07.10 @ 09:40am

crazyin kadhai, katturai, naadagam anaithum nagaichuvaiyai mattume piradhaanap paduthi irukkum. adhu andha nerathil marandhu pogum. adhaiyum thaandi avar konjam sindhithaal manathil nirandhira idam kidaikkum. matrapadi desikan eluthu eppodhum pol suvaarasiyam koottuvadhaagave ulladhu.

அனுப்பியவர் Manikandan on Thursday, 15.07.10 @ 22:17pm

ungal pakkatthin sirappe pugaip padangalthan. avvlavu nerthi. katturai konjam viraivaagave mudindhuvittadhu.

அனுப்பியவர் Kavijeeva on Thursday, 15.07.10 @ 22:33pm

eppodhum pol sirappaga ulladhu. thamarai ilai padangal innum konjam eduthirukkalaame?

அனுப்பியவர் Manoharan on Thursday, 15.07.10 @ 23:32pm

Calcium oxaலடெ idhu oru vedhiporul.. sabeenaavil idhuvaa payanpadugiradhu. i dont think so. pls check it.

அனுப்பியவர் Kannan on Friday, 16.07.10 @ 00:27am

crazy kadhaiyil neenga solla varuvadhu ennna? enaku puriyavilai? andh varigal edhai ninaivup padutthugiradhu.

அனுப்பியவர் Goapaln on Friday, 16.07.10 @ 02:35am

தாமரை தகவல்கள் அருமை.. சுஜாதா தேசிகன் சுஜாதா போன்றே அறிவியல் உண்மைகளை மிக அழகாக அனைவர்க்கும் புரியும்படி சொல்கிறார். நல்ல பத்தி எழுத்திற்கு இவரது எழுத்து ஒரு உதாரணம்.

அனுப்பியவர் கோவை சேகர் on Friday, 16.07.10 @ 10:47am

keerai with thayir.. muyarchi parthen. its really fun.its correct desikan. i like the combination too. thanks.

அனுப்பியவர் vishvakiran on Sunday, 18.07.10 @ 21:40pm

indha vaaram sirukathai paguthi sodhappal. ungalidamirundu nalla siruathaigalai adhan arimugatthai ethirparkirom. nanri.

அனுப்பியவர் Selvam M on Sunday, 18.07.10 @ 22:29pm

desikan vidhavidhamaaga virundhu padaikkirar. indha varam tharamai patriy seidhigal arumai.

அனுப்பியவர் Suganthi Rajan on Sunday, 18.07.10 @ 23:39pm

Nice desikan. i like your writing style. nice to read.

அனுப்பியவர் Manoj Barathi on Monday, 19.07.10 @ 03:33am

desikan solvadhu pol thamaraikul avvalavu araasichigal seiyalaam. iraivan padaippil iyarkai mattume unnamaanadhu.

அனுப்பியவர் Sadagoppan on Tuesday, 20.07.10 @ 03:55am

next article when will come?

அனுப்பியவர் Saga on Thursday, 29.07.10 @ 22:03pm

தேசிகன் அவர்கல் அந்த புத்தகத்தின் பெயரை எழுதவில்லையே ! அதன் அடுத்த பாகம் என்னிடம் இருந்தால் அனுப்பலாமே என்ருதான் !
( எழுத்துப்பிழைகலை மன்னித்தருலவும் ‍‍‍‍‍‍ல்? )

அனுப்பியவர் ர‌ர்ஜகோபால் on Monday, 16.08.10 @ 07:14am

விக்கிபீடியாவிலும் இன்னும் பிற விலும், கீரை பற்றி இன்னும் காண்க: http://en.wikipedia.org/wiki/Spinach: Spinach also has a high calcium content. However, the oxalate content in spinach also binds with calcium, decreasing its absorption. ... foods such as spinach that are high in oxalic acid can increase the risk of kidney stones in some people.

அனுப்பியவர் கெக்கெபிக்குணி on Wednesday, 18.08.10 @ 18:17pm

சொந்தமாக எதுவும் எழுதுவது இலலை என்று சத்தியம் செய்து இருக்கிறீர்களா? உங்களுக்கு என்று ஒரு தனி நடை இருக்கட்டுமே. எப்போ பார்த்தாலும் சுஜாதா மாதிரி தான் எழுத வேண்டும் என்று வேண்டுதலையா? உங்களிடம் சரக்கு இருக்கிறது. தேசிகன் மாதிரி எழுதுங்களேன்.

அனுப்பியவர் கலன் on Sunday, 29.08.10 @ 03:23am

கருத்து பதிவு

(Press Ctrl+12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.