வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


ஒரு மனிதனின் மன நிலையை அப்படியேப் புரட்டிப்போடும் வல்லமை படைத்தது இசை. இசையை நேசிக்கும், சுவாசிக்கும் சிலரின் வாழ்க்கை இந்த சமுதாயத்திற்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது. இசையை தொடர்ந்து கேட்கும் மனிதர்களின் வாழ்நாள் அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது. இசையை உற்று கவனியுங்கள். சாதாரண சப்தங்கள் தான் உங்கள் நாடி நரம்பையே அசைத்து பார்க்கும் வல்லமை படைத்ததாக மாறுகிறது. எப்படி? எந்த ஒன்றையும் சரியான பாதையில் ஒருமுகப்படுத்தி செலுத்தினால் அதனால் இந்த உலகில் அனைத்தையும் வென்று விடலாம் என்பதே இசை நமக்கு சொல்லித்தரும் பாடமாகும்.

மனிதனிப் பொறுத்தவரை யோகா. சப்தங்களை பொறுத்தவரை இசை. மனிதன் செய்யும் யோகக்கலை மனிதனையும் அவன் சார்ந்த சமூகத்தையும் வாழவைக்கிறது. ஆனால் சப்தங்கள் செய்யும் யோகா இவ்வுலகின் ஆண்ட சராசரங்களையும் கட்டுக்குள் வைக்கிறது. இசையை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்காக...

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இசைத்துறையை தமிழ் ஸ்டுடியோ தன்னால் இயன்ற வரை பெருமைப் படுத்த முயல்கிறது.

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
இசை
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


லலிதா ராம்

பெங்களூரில் பொறியாளராய்ப் பணியாற்றும் லலிதா ராம் - இசைத் துறையிலும் வரலாற்றுத் துறையிலும் ஆர்வலர், ஆய்வாளர். இவ்விரு துறைகளைப் பற்றியும் இங்கு தொடர்ந்து எழுதவுள்ளார். திரைப்பட இசையில் பொதிந்து இருக்கும் பாரம்பரிய இசை நுணுக்கங்களைப் பற்றி இணையத்தில் எழுதத் தொடங்கி விமர்சனங்கள், இசைக் கலைஞர்கள், இசைக் கருவிகள் பற்றி கட்டுரைகள் பல இணையத்தில் எழுதியுள்ளார். விகடன் பிரசுரம் வெளியிட்ட 'இசையுலக இளவரசர் ஜி.என்.பி' என்ற இவரது நூல், ஜி.என்.பாலசுப்ரமணியம் என்ற கலைஞனின் இசை வாழ்க்கையை விரிவாகப் படம்பிடித்துள்ளது. ஹிந்து, தினமணி, தினத் தந்தி, ஆனந்த விகடன் ஆகிய இதழ்கள் இந் நூலைப் வெகுவாகப் பாராட்டியுள்ளன.

மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தில் ஆய்வாளராய் விளங்கும் இவர், நண்பர்களுடன் சேர்ந்து நான்கு வருடங்களாக வரலாறு.காம் என்ற இணைய மாத இதழை நடத்தி வருகிறார். கல்வெட்டுகள், கட்டிடக் கலை, சிற்பங்கள், ஓவியங்கள், பயணக் கட்டுரைகள் என பலதரப்பட்ட கட்டுரைகள் தென்னிந்திய வரலாற்றை இணையத்தில் உலவ விடுகின்றன. முனைவர் கலைக்கோவன் எழுதிய மூன்று வரலாற்று நூல்களையும், தொல்லியல் இமயம் ஐராவதம் மகாதேவனின் பணிப் பாராட்டு மலரையும் வரலாறு.காம் வெளியிட்டிருக்கிறது.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS இசை TS லலிதா ராம் தொடர்கள் வாயில்

அரியக்குடி-2

லலிதா ராம்  

பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்காரைப் பற்றி Prof. சாம்பமூர்த்தி 'Great musicians' என்ற புத்தகத்தில், 'பூச்சி ஐயங்காரின் கச்சேரிகள் விவகாரத்துடனும், அதே சமயத்தில், விறுவிறுப்பாகவும் இருக்கும். கச்சேரியைக் களை கட்ட வைக்க மத்யம காலக் கிருதிகளே சிறந்தது என்று அவர் உறுதியாக நம்பினார். அவர் பாடுகையில் சிரமமின்று, சங்கதிகள் ஒன்றன் பின் ஒன்றாய் பிரவாகமாய் பொழிந்த வண்ணம் இருக்கும். கஷ்டமான சங்கதிகள் பாடும் பொழுது கூட, முகத்தில் சிறிதளவும் சிரமம் தெரியாமல் பாடுவார். சங்கீதத்திற்கு 'ஸ்ருதி மாதா, லயம் பிதா'.

பல சமயங்களில் லயத்திற்கு அதிக முக்கியத்துவமளிக்கும் பொழுது, அது ராக பாவத்தைக் கெடுத்து, ஏதோ தலைசுற்றும் கணக்கின் விடையை ஒப்புவிப்பது போல ஆகிவிடும். ஸ்ரீநிவாச ஐயங்காரின் கச்சேரி ராக பாவத்தை முன்னிருத்தி, விவகாரமான லய கணக்குகளில் எல்லாம் ஈடுபடா வண்ணம் இருக்கும். வர்ணங்கள், கீர்த்தங்கள், பதங்கள், ஜாவளிகள் என்று அவரது பாடாந்திரம் பரந்து விரிந்து இருந்தது' என்கிறார்.

1908-ஆம் வருடம், நல்ல நாளாய்ப் பார்த்து, பூச்சி ஐயங்காரிடம் சென்று, தனக்கு அவரிடம் கற்கும் ஆவலைக் கூறினார் இராமனுஜ ஐயங்கார். நல்ல ஞானமும், குரல் வளமும் கொண்ட சீடனை வேண்டாம் என்று எந்த குரு சொல்வார்? அன்று பூச்சி ஐயங்காருக்கும் இராமானுஜ ஐயங்காருக்கும் தொடங்கிய குரு-சிஷ்ய பாவம் 10 ஆண்டுகள் தொடர்ந்தது. 1909-ஆம் வருடம் இராமனுஜ ஐயங்கார் பொன்னம்மாள் என்ற தூரத்து உறவுக்காரப் பெண்ணை வாழ்க்கைத் துணையாகக் கரம்பிடித்தார். பொன்னம்மாள் பூச்சி ஐயங்காருக்கும் உறவாகிப் போனதால், இராமனுஜத்திற்கும் பூச்சி ஐயங்காருக்கும் இருந்த பந்தம் இன்னும் இறுகியது.

பூச்சி ஐயங்காரின் சங்கீத சிட்சை சற்றே வித்தியாசமானது. அரியக்குடியைப் போன்ற முதிர்ந்த சிஷ்யருக்கு பாடம் நடத்தும் பொழுது, சிஷ்யரை பாடச் சொல்லி கேட்டுக் கொண்டே இருப்பார். ஆங்காங்கே திருத்தங்கள் மாத்திரம் செய்வார். இது நடப்பது கூட எப்பொழுதாவதுதான். சிஷ்யனுக்கு உண்மையான பாடம் என்பது கச்சேரிகளில்தான் நிகழும். இடைவிடாது பல கச்சேரிகள் செய்து வந்த பூச்சி ஐயங்காருக்குப் பின் அமர்ந்து, தம்புராவை மீட்டியபடி உடன் பாடும் பொழுது கிடைக்கும் அனுபவமும் ஞானமும், எத்தனை காலம் சாதகம் செய்தாலும் கிடைக்காதவை. கடினமான காட்டுப் பாதையில், பலமுறை சென்று வந்த குரு முன் செல்ல பின்னால் செல்வதென்பது அத்தனை கஷ்டமில்லைதானே? பலமுறை அந்த பாதையில் குருவுடன் பயணம் செய்பவர், காலப்போக்கில் தன்னிச்சையாய் செல்லக் கூடியவராக மாறுவதும் இயற்கைதானே? நல்ல கிரஹிப்புத் தன்மை கொண்ட இராமானுஜ ஐயங்காரின் ஆற்றல், குருவுடன் பல கச்சேரிகளில் பாடிப் பெற்ற அனுபவத்தால் தனித்து கச்சேரி செய்யக்கூடிய அளவிற்கு வளர்ந்தது.

1912-ஆம் வருடம், சோமசுந்தரம் செட்டியார் என்ற செல்வந்தரின் வீட்டுக் கல்யாணம் கண்டனூரில் நடை பெற்றது. கல்யாணத்தின் முதல் நாள், பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார் கச்சேரி. திருக்கோடிக்காவல் கிருஷ்ணையர், கும்பகோணம் அழகநம்பி பிள்ளை, புதுகோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, உமையாள்புரம் சுந்தரமய்யர் போன்ற ஜாம்பவான்களின் பக்கவாதியத்துடன் கச்சேரி இனிதே நடந்தேறியது.

அடுத்த நாள், அதே பக்கவாத்யக்காரர்களுடன் கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரின் கச்சேரி. கச்சேரியின் பொழுது, திருவேங்கடத்தையங்காரின் நண்பரான சோமசுந்தர செட்டியாருக்கு, நேற்று குருவுடன் தம்புரா மீட்டியபடி இசைத்த தம் நண்பரின் மகனை இந்த மேடையின் கச்சேரி செய்ய வைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. சோமசுந்ந்தம் செட்டியாரின் இந்த விண்ணப்பத்திற்கு பூச்சி ஐயங்கார் உற்சாகமாக சம்மதித்தாலும், கச்சேரி நிகழ்வதில் ஒரு சிக்கல் இருந்தது. 22 வயதே ஆன இராமனுஜத்திற்கு வாசிக்க பக்கவாத்யங்களுக்கு எங்கே போவது. கோனேரிராஜபுரம் வைத்தாவுக்கு 4 மணி நேரம் வாசித்து களைத்து போயிருக்கும் ஜாம்பவான்களை இராமனுஜத்திற்கு எப்படி வாசிக்கச் சொல்ல முடியும்?

அரியக்குடியின் கச்சேரி அன்று நடந்ததா?

அடுத்த வாரம் பார்ப்போம்...

தொடர்ந்து இசைப்போம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.