தூம பத்ர தூளி - 2
சில மாதங்களுக்கு முன் மூக்குப் பொடி பற்றி நான் எழுதியிருந்தது வாசகர்களளுக்கு நினைவிருக்கலாம்.
சமீபத்தில் ரோஜா முத்தையா லைப்ரரியில் வேறொரு வேலைக்காக பழைய அனந்த விகடன் படிகளைப் புரட்டிய போது, 1933-ம் ஆண்டு ஜூலை இதழில் நான் முன்பு குறிப்பிட்டிருந்த பட்டணம் சுப்ரமணிய ஐயரின் கிருதி வெளியாகியுள்ளது. இந்தக் கிருதியைப் பற்றி பல இடங்களில் குறிப்புகள் கிடைக்கக் கூடும். எனினும், இந்தக் கிருதியின் சாஹித்யத்தை நான் இது வரை கண்டதில்லை. முதன் முறையாய் கண்ட போது பெரிதும் மகிழ்ந்தேன். யாம் பெற்ற இன்பம் பெருக தமிழ்ஸ்டுடியோ வாசகர்களும்.!!
சாவேரி ராகம், ஆதி தாளம், திஸ்ர கதி
பல்லவி
தூமபத்ரதூளி தகலுனா
ஈ தரித்ர ஊரிலோ
தயதோனிபுடு தெலுபவய்யா
அனு பல்லவி
காமிதார்த்தபல முவிச்சுனே
ஒகசிமிடாதூளி
பூமிலோனு லக்ஷகுடுனு
பிக்ஷகுடுனு விச்வஸிஞ்சே (தூம)
சரணம
மெப்புகைன மொகடநின்னு
கொனுடஸம்ப்ரதாயமே
அப்புதீஸி வெனுகநின்னு
புச்சுகொண்டே நியாயமா
நிப்புநீள்ளு காலிவலெனு
நீவுப்ராணாதாரமே
கொப்பவரத வெங்கடேச
ஸுப்ரஸாத ஸாரமே (தூம)
அந்த பாடலில், "ஐயா! இந்த தரித்திர ஊரில் மூக்குப்பொடி கிடைக்குமா? தயவுடன் இயம்புவாய்! ஒரு சிட்டிகை பொடி, ஆண்டியையும் அரசனையும் பாரபட்சமின்றி பரவசப்படுத்தும். ஏ பொடியே! உன்னை இயன்றவரை கையிருப்பில் வைத்திருப்பது உத்தமம். அப்படியில்லாத பட்சத்தில், இருப்பவரிடம் கையேந்தி பெற்றாலும் பாதகமில்லை. நீர், காற்று, நெருப்பு போல நீயும் ஒரு அத்தியாவசியப் பொருள்! என்னய்யன் திரு வேங்கடமுடையான் அருளிய பிரசாதம் நீ!" என்கிறார் பட்டணம்.
தொடர்ந்து இசைப்போம்...
|