வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


ஒரு மனிதனின் மன நிலையை அப்படியேப் புரட்டிப்போடும் வல்லமை படைத்தது இசை. இசையை நேசிக்கும், சுவாசிக்கும் சிலரின் வாழ்க்கை இந்த சமுதாயத்திற்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது. இசையை தொடர்ந்து கேட்கும் மனிதர்களின் வாழ்நாள் அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது. இசையை உற்று கவனியுங்கள். சாதாரண சப்தங்கள் தான் உங்கள் நாடி நரம்பையே அசைத்து பார்க்கும் வல்லமை படைத்ததாக மாறுகிறது. எப்படி? எந்த ஒன்றையும் சரியான பாதையில் ஒருமுகப்படுத்தி செலுத்தினால் அதனால் இந்த உலகில் அனைத்தையும் வென்று விடலாம் என்பதே இசை நமக்கு சொல்லித்தரும் பாடமாகும்.

மனிதனிப் பொறுத்தவரை யோகா. சப்தங்களை பொறுத்தவரை இசை. மனிதன் செய்யும் யோகக்கலை மனிதனையும் அவன் சார்ந்த சமூகத்தையும் வாழவைக்கிறது. ஆனால் சப்தங்கள் செய்யும் யோகா இவ்வுலகின் ஆண்ட சராசரங்களையும் கட்டுக்குள் வைக்கிறது. இசையை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்காக...

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இசைத்துறையை தமிழ் ஸ்டுடியோ தன்னால் இயன்ற வரை பெருமைப் படுத்த முயல்கிறது.

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
இசை
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


லலிதா ராம்

பெங்களூரில் பொறியாளராய்ப் பணியாற்றும் லலிதா ராம் - இசைத் துறையிலும் வரலாற்றுத் துறையிலும் ஆர்வலர், ஆய்வாளர். இவ்விரு துறைகளைப் பற்றியும் இங்கு தொடர்ந்து எழுதவுள்ளார். திரைப்பட இசையில் பொதிந்து இருக்கும் பாரம்பரிய இசை நுணுக்கங்களைப் பற்றி இணையத்தில் எழுதத் தொடங்கி விமர்சனங்கள், இசைக் கலைஞர்கள், இசைக் கருவிகள் பற்றி கட்டுரைகள் பல இணையத்தில் எழுதியுள்ளார். விகடன் பிரசுரம் வெளியிட்ட 'இசையுலக இளவரசர் ஜி.என்.பி' என்ற இவரது நூல், ஜி.என்.பாலசுப்ரமணியம் என்ற கலைஞனின் இசை வாழ்க்கையை விரிவாகப் படம்பிடித்துள்ளது. ஹிந்து, தினமணி, தினத் தந்தி, ஆனந்த விகடன் ஆகிய இதழ்கள் இந் நூலைப் வெகுவாகப் பாராட்டியுள்ளன.

மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தில் ஆய்வாளராய் விளங்கும் இவர், நண்பர்களுடன் சேர்ந்து நான்கு வருடங்களாக வரலாறு.காம் என்ற இணைய மாத இதழை நடத்தி வருகிறார். கல்வெட்டுகள், கட்டிடக் கலை, சிற்பங்கள், ஓவியங்கள், பயணக் கட்டுரைகள் என பலதரப்பட்ட கட்டுரைகள் தென்னிந்திய வரலாற்றை இணையத்தில் உலவ விடுகின்றன. முனைவர் கலைக்கோவன் எழுதிய மூன்று வரலாற்று நூல்களையும், தொல்லியல் இமயம் ஐராவதம் மகாதேவனின் பணிப் பாராட்டு மலரையும் வரலாறு.காம் வெளியிட்டிருக்கிறது.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS இசை TS லலிதா ராம் தொடர்கள் வாயில்

தியாகராஜரும் சரணாகதித் தத்துவமும

லலிதா ராம்  

இந்தக் கட்டுரை மரத்தடி இணைய இதழ் 2004 ஆம் ஆண்டு விழாப் போட்டியில் வெளிவந்தது.

கர்நாடக சங்கீத கச்சேரிகள் கேட்க ஆரம்பித்த காலத்தில், தியாகராஜரின் கிருதிகள் என்றால் 'சரணாகதி தத்துவம்' மட்டும்தான் இருக்கும். 'ராமா! நான் ரொம்பவே கஷ்டத்துல இருக்கேன். சம்சார சாகரத்துல தவிக்கறேன். எத்தனையோ பேரைக் கரை சேர்த்தா மாதிரி என்னையும் காப்பாத்து' என்பதையே மையக் கருத்தாகக் கொண்டு எழுதப்பட்ட பாடல்கள்தான் நிறைந்திருக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்தேன். இதில் வேடிக்கை என்னவெனில், இக்கருத்தை நான் பலமுறை பலரிடம் கூறியிருக்கிறேன். ஒரே ஒருவரைத் தவிர எனது கருத்தை மறுத்தலித்தவர் எவரும் இல்லை. என் கருத்தை முதன் முதலில் மறுத்தவருக்கு மறுமொழி சொல்லவே, முதன் முதலாக தியாகராஜ கீர்த்தனைகளின் அர்த்தத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.

நான் புத்தகத்தை பிரித்தவுடன் கிடைத்த முதல் பாடல்,

"இந்த சௌக்கிய மநிநே ஜெப்பஜால
எந்தோ ஏமோ எவரிகி தெலுஸ¤னோ"

காலைப் படித்துக் கதறும் சோக மயமானவராகவே என் கற்பனைக்கு அது நாள் வரை காட்சியளித்திருந்த தியாகராஜர், "இது எத்தனை இன்பம் என்று எப்படி வருணிக்க முடியும்? அது என்னமோ, ஏதோ, யாருக்கு தெரியும்" என்று பெரிய குண்டாகத் தூக்கிப் போட்டார். அன்றிலிருந்து தியாகராஜர் பாடல்களின் அர்த்தங்களை ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தேன். (இதனால் வந்த பெரிய சங்கடம் என்னவென்றால், கச்சேரியில் பாடகர் தவறாகப் பாடும் பொழுதெல்லாம் புரிந்து தொலைத்து இசையை பல சமயங்களில் ரசிக்க முடியாமல் நேர்ந்தது.)

தியாராஜரை 'ரசக் கடல்' என்கிறான் பாரதி. அந்த ரசக் கடலில் ஒரு துளியைக் காண "ஏல நீ தயராது" என்ற மிகப் பிரபலமான பாடலை எடுத்துக் கொள்வோம். (சலங்கை ஒலி படத்தில் கமல் சமையல் அறையில் ஆடும் பாடல், படத்தில் பாடல் அனுபல்லவியான "பால கநகமய" என்ற இடத்திலிருந்து ஆரம்பிக்கும்). இப்பாடலை கேட்கும் பொழுதெலலம், பல்லவியில் "உன் தயை ஏன் என் மேல் விழவில்லை" என்று கூறியிருப்பது மட்டும் புரியும். அதற்குப் பின் வருவதும் இப்படித்தான் புலம்பலாகும் என்று முடிவு கட்டியிருந்தேன். ஒழுங்காகப் படித்த பொழுது, ஒரு தாய், கோவமாக இருக்கும் குழந்தையை சமாதானப் படுத்துவது போன்ற பாவத்தை மிக அழகாகக் கொண்டு வந்து இருக்கிறார் தியாகராஜர் என்று விளங்கியது.

"பால கநகமயசேல ஸ¤ஜனபரிபால
ஸ்ரீ ரமாலோல வித்ருதசர
ஜால சுபத கருணாலவால கந
நீல நவ்யவந மாலிகாபரண" (ஏல நீ தயராது)

"பால", "சேல", "பால", "லோல". "ஜால" "வால, "நீல" என்று வார்த்தைகளால் விளையாடியிருக்கும் இந்த அனுபல்லவியைப் படிக்கும் பொழுதும், முதல் வார்த்தையான "பால" மற்றும் கடைசி வார்த்தையான "ஆபரண" என்று வருவதைப் பார்க்கும் பொழுதும், மற்ற வார்த்தைகள் புரியாவிடினும், அது ஒரு பாலகனைப் பற்றிய வர்ணனை என்று புரிந்துகொள்ள முடிகிறது. திருப்புகழை படித்தாலே 'லயம்' வெளிப்படுவதுபோல, இந்த வார்த்தைகளைக் 'அடாணா' இராகத்தில் கேட்டாலே, கோவித்துக் கொண்டு முரண்டு பிடிக்கும் குழந்தையை, 'நீ எவ்வளவு அழகு, நீ என்ன ஒரு பராக்கிரமசாலி, உன்னை எல்லாருக்கும் பிடிக்கும், நீ வரலைன்னா நான் ரொம்ப வருத்தப்படுவேன். நான் வருத்தப்பட்டா பரவாயில்லையா? என் மேல தயை இருக்கா இல்லையா?'. என்று சமாதானப் படுத்துவது போன்ற பாவம் அழகாக வெளிவரும்.

அனுபல்லவிக்குப் பின் மறுபடியும் "ஏல நீ தயராது" என்று சொல்லிப் பாருங்கள், "என் மேல் உன் தயை ஏன் இன்னும் விழவில்லை" என்று தியாகராஜர் பாடுவது புலம்பலாகத் தெரியாது. இதனால்தான் சலங்கை ஒலி படத்திலும், அதற்கு முன்னால் பல கச்சேரிகளிலும், பாடகர்கள் இப்பாடலை அனுபல்லவியிலிருந்து தொடங்கி இருகிறார்கள் என்று நினைக்கிறேன். தியாகராஜரின் இந்த பாடலை மட்டும் எடுத்துக் கொண்டு IF YOU analyze musically and poetically, one can easily write a PhD thesis. மூன்று சரணங்கள் கொண்ட இப்பாடலின் முதல் சரணத்த்தின் முதல் வரியை மட்டும் பார்ப்போம்.

"ராரா தேவாதி தேவா, ராரா மஹாநுபாவ" 'ராரா' என்றால் 'வாடா' என்று எல்லோருக்கும் தெரிந்ததுதான். கச்சேரியில் பாடும் போது இந்த வரியை மட்டுமே பலமுறை பலவிதங்களில் பாடகர் பாடுவார். அப்படி பாடப்படும் பல்வேறு விதங்களுக்கு 'சங்கதிகள்' என்று பெயர். 'ராரா' என்ற சொல்லை வேறு வேறு சங்கதியில் நினைத்துப் பாருங்கள். "என் செல்லம் இல்ல, வாடா" என்று கெஞ்சலாய் ஒருமுறை, "நீதான் சமர்த்து பையனாச்சே வாடா", என்று கொஞ்சலாய் ஒருமுறை, "உன்னைக் காணலைனு உன் friends எல்லாம் தேடறா, வாடா" என்று ஆசைக் காட்டி ஒருமுறை, "நேரமாச்சு நான் போறேன், நான் கூப்பிட்டா வருவியா மாட்டியா, சொல்றதைக் கேட்டுச் சமர்த்தா வாடா" என்று மிரட்டல் கலந்த கெஞ்சலுடன் ஒரு முறை...இதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத குழந்தையை என்ன செய்ய? மிரட்ட வேண்டியதுதான் "நீ வரப் போறியா இல்லை அப்பாவை கூப்பிடட்டுமா, மரியாதையா வாடா"...என்று பல பாவங்கள் பரிமாணிக்கும்படி சங்கதிகள் அமைத்து பாடலைப் புனைந்து இருக்கிறார்.

இந்த அர்த்தங்களையெல்லாம் உள் வாங்கி ஒரு பாடகன் பாடினானெனில், கேட்பவருக்கு பாஷை புரியாவிடினும் அர்த்தம் நிச்சயமாய் விளங்கும். 'அடாணா' என்பது வீரத்தைக் குறிக்கும் ராகமாகவே பெரும்பாலும் கருதப் படுகிறது. 'சினிமாவுல, சிரிச்சா சித்தார்..செத்தா ஷெனாய்' என்று ஒரு வசனம் உண்டு. அதைப் போல அடாணா என்றாலே வீரம் என்று நினைத்துக் கொண்டு இப்பாடலைப் பாடினால் உண்மையான பாடலின் பாவம் வெளிப்படாது. பாடலின் அர்த்தம் உணர்ந்து பாடினால், ஒரே ராகத்தில் பல ரசங்களை வெளிப்படுத்தக் கூடிய சூட்சுமம் புரிபடும்.

இராமனிடம் பேசுவது போல, அப்பொழுது அவரைச் சூழ்ந்திருந்தவரின் பொறாமையையும், அறியாமையும், ஏமாற்று வேலையையும் கடுமையாகச் சாடுகிறார். 'தெலிஸி ராம' என்ற பாடலில், குதர்க்க புத்தி நிறைந்தவரை "ராமா என்றால் பரப்பிரம்மம் என்றும் பொருள், ஆனால் சிலர், பெண் என்றொரு அர்த்தமும் அத்ற்கு இருப்பதாகக் கூறுவர். அவர் காமாந்தகராய் இருந்தாலன்றி அவருக்கு இந்த அர்த்தம் தோன்றாது", என்று கடுமையாகச் சாடுகிறார். 'மநஸ¤ நில்ப' என்ற பாடலில் "மனதை நிறுத்த (அடக்க) சக்தியில்லாத ஒருவன், காதிற்கு இனிமையான மணியை அடித்து பூஜை செய்தால் புண்ணியம் கிடைத்துவிடுமா என்ன?" என்று பூஜை என்கிற பெயரில் ஊரை ஏமாற்றுபவரைச் சாடுகிறார். 'எந்த முத்தோ' என்ற பாடலில் "பாகவதர் போல உடையணிந்த்தால் மட்டும் ஒருவன் உண்மையில் பாகவதராகிவிடுவானா என்ன?

இப்படி வெளிப்புறக் காட்சியளித்தபடி, தனது அத்தையின் கடைக்கண் பார்வை தன் மேல் விழாதா என்று ஏங்பவனைப் பார்க்கையில், எவ்வளவுதான் சுவையான பாலாக இருந்தாலும், அதன் சுவை, அது இருக்கும் பாத்திரத்திற்கு எப்படித் தெரிவதில்லையோ, அதைப்போலவே இருக்கிறது இந்த பாகவதர்களின் லட்சணம்" என்கிறார்.

இவரது கேலி, போலி ஆசாமிகளைச் சாடி மட்டுமல்ல, அவர் இஷ்ட தெய்வமான இராமனையே கேலி செய்திருக்கிறார். இந்த வகைப் பாடலுக்குப் பெயர் 'நிந்தா ஸ்துதி'. (நிந்தனையின் மூலம் ஸ்துதி, தமிழிசை மூவரில் ஒருவரான மாரிமுத்தாப் பிள்ளை, பல பாடல்களை தில்லை அம்பலாவணனின் மேல் நிந்தா ஸ்துதியாக எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி ஒரு தனிக் கட்டுரை, நேரமிருப்பின் இன்று அல்லது எப்பொழுது ஒழிகிறதோ அப்பொழுது எழுதுகிறேன்) "மா ஜானகி" என்ற பாடல் (மெர்க்குரிப் பூக்கள் படித்தவர்களுக்கு இப்பாடல் நிச்சயம் நினைவிலிருக்கும் என்று நம்புகிறேன்), "ராமா! நீ பராக்கிரமசாலிதான். உன் பராக்கிரமம் எல்லாம் உலகுக்கு தெரிந்தது எப்படி? "எங்கள்" சீதையை நீ மணம் முடித்ததால். (எங்கள் என்ற சொல்லை கவனிக்க வேண்டும்). அவளை இராவணன் தூக்கிச் சென்றிருக்காவிடில் உன் புகழ் எப்படி வெளி வந்திருக்கும்? அவள் நினைத்திருந்தால் இராவணனை அழித்திருக்க முடியாதா? உன் புகழ் நிலைக்கட்டுமே என்று கஷ்டங்களை எல்லாம் பொருட்படுத்தாது அவள் பொறுமையின் சிகரமாய் இருந்ததால்தான் உனக்குப் பெருமை." என்று எள்ளி நகையாடுகிறார்.

"எவரி மாட" என்ற பாடலில், "யார் சொல் பேச்சைக் கேட்டு, நீ இங்க வராம இருக்க?" என்று உரிமையுடன் கோபித்துக் கொள்கிறார். "எவர நீ" என்ற பாடலில் 'ராம' என்ற சொல்லுக்கு அழகிய அர்த்தத்தைக் கூறுகிறார். சிவனுக்கு உகந்த பஞ்சாக்ஷர மந்திரமான "நமசிவாய" என்பதில் 'ம' என்ற எழுத்தே ஜீவன். அது இல்லாவிடில் 'ந சிவாய' (அதாவது "சிவம் இல்லை" என்ற பொருள்) ஆகிவிடும். விஷ்ணுவிற்கு உகந்த "நாரயணாய" என்ற மந்திரத்தில், 'ரா' என்ற எழுத்தே ஜீவன். அதை நீக்கிவிட்டால் 'நா அயனாய' என்று ஆகிவிடும். நாராயணன் என்றால் எங்கும் நிறைந்தவன் என்று பொருள். 'நா அயனன்' என்றால் எங்குமே இலறவன் என்று பொருள். இந்த இரு ஜீவ எழுத்துக்களைக் கோத்து 'ராம' என்ற பெயர் பிறந்ததாக தியாகய்யர் கூறுகிறார்.

இன்றைய நிலையில், இந்த அர்த்தமெல்லாம் உணர்ந்து, சரியாகப் பிரித்து, ஒழுங்காகப் பாடுவார்கள் என்றெல்லாம் எதிர்பார்த்து கச்சேரிக்குச் சென்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும். 'நிதி சால சுகமா' பாட வேண்டி பாடகரைக் கேட்டுக் கொண்டால். "payment cash-ஆ கொடுத்துடுவேள்தானே?" என்று பதில் கேள்வி வரும் காலம் ஓய் இது.

காஞ்சி கைலாசநாதர் கோயில்

தொடர்ந்து இசைப்போம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.