வீடு திரையிடல் & கலந்துரையாடல்
சென்ற மாதம் (டிசம்பர்) 15 ஆம் தேதி பெரியார் திடலில் வீடு திரைப்படம் திரையிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பாலு மகேந்திராவுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், வீடு திரைப்படம் பற்றியும், அதன் உருவாக்கம் பற்றியும், நெகிழ்ச்சியுடன் பாலு மகேந்திரா அவர்கள் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்: (ஒளிப்படக் கலைஞர் சுந்தர்)
 |
விவாதத்தில் பாலு மகேந்திரா |
 |
பேசாமொழி இணைய இதழை பாலு மகேந்திரா அவர்கள் தொடங்கி வைக்கிறார். |
 |
வீடு திரைப்படத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, பாலு மகேந்திரா அவர்களுக்கு முழுக்க முழுக்க வெள்ளியினாலான வீடு ஒன்றை தமிழ் ஸ்டுடியோ அருண் பரிசளிக்கிறார். |
 |
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை சார்பாக பாலு மகேந்திரா அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. |
 |
விவாதத்தில் பங்கேற்கும் பார்வையாளர்கள் |
 |
விவாதத்தில் பங்கேற்கும் பார்வையாளர்கள் |
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |