இதழ்: 14,     சித்திரை - 2014 (April)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 9 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
'இனம்' பிரச்சினையும் படைப்புச் சுதந்திரமும் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
திரைமொழி 9 - ராஜேஷ்
--------------------------------

இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்

--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - தினேஷ் குமார்

--------------------------------

அப்பாஸ் கிராஸ்தமி - எம்.ரிஷான் ஷெரீப்

--------------------------------
பாலுமகேந்திரா நினைவுக்கூட்டம் - 1 - தினேஷ் குமார்
--------------------------------
ஃபன்றி (Faundry) : சிரிதரன் துரைசுந்தரம்
--------------------------------
இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டம - தினேஷ் குமார்
--------------------------------
 
   
   

 

 

திரைமொழி - 9

முதல் பாகம் – Visualization – The Process

அத்தியாயம் 3 – Storyboards (தொடர்ச்சி)...

எளிமையான ஸ்டோரிபோர்ட் வரையும் முறைகள்

film directing
shot by shot
visualizing from concept to screen

Steven D. Katz         தமிழில்: ராஜேஷ்

இந்த அத்தியாயத்தின் மிக முக்கியமான கருத்து என்னவென்றால், ஒரு இயக்குநர் ஸ்டோரிபோர்ட்களை உபயோகிக்கிறாரோ இல்லையோ, அவை அவருக்கு எப்போதுமே உதவுகின்றன என்பதே. உதாரணமாக, திரைக்கதையின் பெரும்பகுதி ஸ்டோரிபோர்ட்களாக மாற்றப்பட்டபின்னர், ஒரு இயக்குநரால் கதை இந்த ஸ்டோரிபோர்ட்களில் எப்படியெல்லாம் உணர்ச்சிபூர்வமாகக் கொண்டுசெல்லப்படுகிறது என்பதை மிக எளிதில் யூகித்துவிடமுடியும். ஆனால் ஒரு திரைக்கதையைப் படிக்கையில் இந்த அனுபவம் நிகழ்வது சற்றே சிரமம்தான். கூடவே, பேப்பரில் ஒரு திரைப்படத்தை இந்தவிதமாக விஷுவலைஸ் செய்வது பல புதிய யோசனைகளை எழுப்பவும் உதவும். ஸ்டோரிபோர்ட்கள் என்பது ப்ரொடக்ஷன் பிரிவுக்குத் திரைப்படம் பற்றித் திட்டமிட்டு மட்டும் கொடுக்கும் விஷயம் மட்டும் அல்ல என்பது இதன்மூலம் புரியும். ஒரு இயக்குநர், கைகளை சட்டையை மடித்துக்கொண்டு தனது படத்துக்காக ஸ்டோரிபோர்ட்களைத் தானே வரைய ஆரம்பிப்பது இன்னும் அதிக நன்மைகளைப் புரியக்கூடியது. ஸ்கெட்ச்கள் எத்தனை கொடூரமாக இருந்தாலும், அவைகளை வரையக்கூடிய மனநிலையும் எண்ணவோட்டமும்தான் இந்த இடத்தில் மிக முக்கியம். இவற்றின்மூலம்தான் பல புதிய யோசனைகள் இயக்குநர்களுக்குக் கிடைக்கும்.

இயக்குநர் ப்ரையன் டி பால்மா, ஒரு ஆப்பிள் கணினியில் Storyboarder என்ற மென்பொருள் மூலம் தானே தனது படங்களுக்காக நாம் எற்கெனவே பார்த்த Stick figureகளை வரைகிறார். இவைகள் எத்தனை எளிய படங்களாக இருந்தாலும், ஒவ்வொரு படமும் அவரது மனதில் அந்த ஷாட்டுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் அவசியம் கொண்டுவந்து சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், அவருக்கு உதவக்கூடிய இந்த விஷயம் மற்றவர்களுக்கு உதவாமலும் போகலாம். மற்றவர்களுக்கு வேறுவிதமான ஸ்டோரிபோர்ட்கள் அவர்களின் தேவைக்கேற்பப் பிடித்திருக்கலாம். இந்த ஆங்கிலப் புத்தகத்துக்கான ஸ்டோரிபோர்ட்கள் சேகரித்ததில், ஒவ்வொரு ஆர்ட்டிஸ்ட்டும் தனக்கே உரிய பிரத்யேகப் பாணியில் வரைந்துள்ள பல ஸ்கெட்ச்களை ஒரே இடத்தில் கொண்டுவந்தது ஒரு மறக்கமுடியாத அனுபவம் என்கிறார் ஸ்டீவன் காட்ஸ்.

வரைவதன் நுணுக்கங்கள்

இந்தப் புத்தகத்தின் நோக்கம், ஸ்கெட்ச்கள் வரைவதைச் சொல்லிக்கொடுப்பது அல்ல. இருந்தாலும், வரைவதன் ஒரு மிக முக்கிய நோக்கம் – எதையெல்லாம் வரையும்போது விட்டுவிடுகிறோம் என்பதில் இருக்கிறது. இது உலகின் பல கலைவடிவங்களின் உருவாக்கத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது. எளிமை என்பது ஸ்டோரிபோர்ட் வரையும் ஆர்ட்டிஸ்ட்டின் இன்றியமையாத ஒரு தன்மை. காரணம், குறைந்த நேரத்தில் மிகுந்த தகவல்களை ஸ்டோரிபோர்ட்கள் மூலம் அவன் தெரிவித்தாகவேண்டும். எப்போதாவது ஒரு முறைதான் ஆர்ட்டிஸ்ட்களுக்கு நிறைய நேரம் என்பது கிடைக்கும்.
ஓவியர் நோயல் ஸிக்கிள்ஸின் (Noel Sickles) கோட்டோவியங்கள், எளிமைக்கும் சிக்கனத்துக்கும் சரியான உதாரணங்கள். ஒரு தொழில்முறை ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட்டாக இல்லாவிட்டாலும், முதலில் காமிக்ஸ்களிலும் பின்னர் விளம்பர ஓவியங்களிலும் அவரது பாணி இன்றுவரை ஆராயத்தக்க ஒரு பாணியாகவும், மிகுந்த செல்வாக்குடையதாகவும் இருக்கிறது. Scorchy Smith என்ற தினசரி செய்தித்தாள் கார்ட்டூன் ஸ்ட்ரிப்பில் இருந்து எடுக்கப்பட்ட சில ஸ்கெட்ச்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சில கோடுகளை வைத்துக்கொண்டே எல்லா விதமான பரப்புகளையும் இடங்களையும் எப்படியெல்லாம் அவரால் சொல்லமுடிந்திருக்கிறது என்பதை அவற்றில் காணலாம். குறிப்பாக, இவற்றின் பின்னணி விபரங்களை வைத்துக்கொண்டு, ஒரு ஸ்டோரிபோர்ட் ஆர்ட்டிஸ்ட் பல தகவல்களைத் தெரிந்துகொள்ளமுடியும்.

போலவே, எத்தனை எளிமையானதாக ஒரு ஸ்கெட்ச் இருந்தாலும், இயக்குநரின் மனதில் ஒரு ஷாட்டை உருவாக்குவதில் பேருதவிகளை அவை புரியும் என்பதற்கும் ஒரு உதாரணம் இருக்கிறது. கீழே நாம் பார்க்கப்போவன, ஷெர்மன் லாப்பி (Sherman Labby) வரைந்தவை. Beverly Hills Cop II படத்துக்காக. இவற்றைப் போன்ற Thumbnail படங்களை 2-3 நிமிடங்களில் வரைந்துவிடமுடியும். எனவே இயக்குநருடனான சந்திப்புகளில், ஒரு முழு சீக்வென்ஸையே ஒரு மணி நேரத்தில் இந்த விதமாக முடித்துவிடமுடியும். அதேசமயம், ஸ்டோரிபோர்ட்கள் என்பவற்றை ‘ஸ்கெட்ச்கள்’ என்பவற்றின் கோணத்திலிருந்து மட்டுமே பார்ப்பது தவறு. உண்மையில், ஒரு ஸீனின் கருத்துக்காக உழைக்கும் நேரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால்மட்டுமே எத்தனை சீக்கிரம் அந்த ஸீன் ஸ்கெட்சாக மாற்றப்படும் என்பதைச் சொல்லமுடியும். இங்கே நாம் பார்க்க இருக்கும் ஸ்கெட்ச்கள், விவாதங்களின்போது சுருக்கமாக வரைந்துகொள்ளப்படுபவை. இவற்றைப் பின்னர் விரிவாக, நேர்த்தியாக வரையக்கூடலாம்.

மனநிலை

மறுபடியும் ஷெர்மன் லாப்பியின் சில ஸ்கெட்ச்களை இனியும் பார்க்கலாம். Blade Runner படத்தின் ஆரம்ப ஸீன் இது. லாப்பியின் விவரிப்பை அற்புதமாக விளக்கக்கூடிய ஸ்கெட்ச்கள் இவை. ஆனால் துரதிருஷ்டவசமாக இவை படமாக்கப்படவில்லை. Mood என்ற மனநிலையை உபயோகித்து ஒரு திரைப்படத்தின் Tone என்பதை எப்படி வடிவமைப்பது என்பதற்கான தத்ரூபமான உதாரணங்கள் இவை. இந்த உதாரணத்தில், அமைதியான, ஒதுக்குப்புறமான ஒரு கிராமப்புற பின்னணி இருக்கிறது. படத்தின் ஹீரோவான ஹாரிஸன் ஃபோர்ட் நடிக்கும் Decker என்ற பாத்திரம் ஒரு வயல்வெளியில் வந்து இறங்குவதை விவரிக்கும் ஸ்கெட்ச்கள் இவை. 40களின் சைன்ஸ் ஃபிக்ஷனின் குணாதிசயத்தை மிகவும் எளிமையாக வரையப்பட்ட இந்த ஸ்கெட்ச்கள் நம்முள் எப்படி எழுப்புகின்றன என்பதைக் கவனியுங்கள்.









கேரக்டர்

இனிவரும் அடுத்த ஸ்டோரிபோர்ட் வரிசைகளைக் கவனித்தால், ஒவ்வொரு காட்சிக்குமான நகைச்சுவையான குணாதிசயங்களை வெளிப்படுத்தக் கதாபாத்திரங்கள் எப்படி உதவுகின்றன என்பது விளங்கும். இதனை வரைந்தவர் ஃப்ரெட் லக்கி (Fred Lucky). டிஸ்னி ஸ்டுடியோவில் காட்ட்டூன்களை வரையும் துறையில் இருந்தவர். அதன்பின் அவர்களது திரைப்படப் பிரிவில் துணுக்கு எழுத்தாளராக வேலைக்குச் சேர்ந்தவர். இன்றுவரை வருடத்துக்கு ஐந்து அல்லது ஆறு படங்களில் ஃப்ரெட் ஸ்டோரிபோர்ட்களை வரைகிறார். அவரது அபாரமான நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் காட்சிகளைப் புரிந்துகொண்டு எழுதும் திறமையினால், அவருக்கான இடம் அப்படியே இருக்கிறது. மேலும் பலரால ஒவ்வொரு வருடமும் மொய்க்கப்படும் வெற்றிகரமான ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட்டாக விளங்குகிறார் ஃப்ரெட்.



தொடரலாம்...

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </