இதழ்: 22     புரட்டாசி (September 15 - 30), 2014
   
 
  உள்ளடக்கம்
 
கென்லோச் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
லத்தீன் அமெரிக்க சினிமா 3 - சாரு நிவேதிதா
--------------------------------
திரைமொழி - 11 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
வெள்ளித்திரை வித்தகர்கள் - 1 - அறந்தை மணியன்
--------------------------------
விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 6 - தினேஷ் குமார்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா 2014 - 3 - யுகேந்தர்
--------------------------------
திரையில் புதினம் - வருணன்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ நிகழ்வுகள் - செப்டெம்பர் - தினேஷ் குமார்
--------------------------------
 
   
   

 

 

தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா 2014 - 3

லெனின் விருது 2014 - சஷி குமார்

- யுகேந்தர்

சென்ற இதழ் தொடர்ச்சி...

லெனின் விருது விழாவில் சஷி குமார் அவர்கள் பேசியதின் சாரம்:

வணக்கம், தமிழில் பேச எனக்கு அவ்வளவாக வராது, அதுமட்டுமல்ல, இங்கு மேடையில் அமர்ந்திருப்பவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசினாலே புரியும். ஏற்கனவே தாமதாகி விட்டது, தலைமை உரைக்கு இது சரியான தருணமில்லை என நினைக்கிறேன். இந்த மாலையின் முக்கியமான அம்சம் ஆனந்த் பட்வர்தனையும் அவரது படங்களையும் கொண்டாடுவதே ஆகும். அவரது நான்கு குறும்படங்களை இப்போது நாம் பார்த்தோம். அவரது படங்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். நிகழ்வின் இறுதியில் ஒரு பெரிய படத்தை பார்க்க இருக்கிறோம். தலைமை உரைக்கு பதிலாக, என மனதில் தோன்றிய இரண்டு அல்லது மூன்று கருத்துக்களைக் குறிப்பிட வேண்டும் என நினைக்கிறேன்.

சினிமா என்ற வகையில் நாம் எங்கு இருக்கிறோம் என்பது கொஞ்சம் குழப்பமாகவே எனக்கு தெரிகிறது. காட்சி ஊடகம் மற்றும் திரைப்படங்களின் மாணவனாகவே நான் எப்போதும் இருந்திருக்கிறேன். எனது பார்வையில், இப்போது நடக்கு ஒரு விஷயம் "படிமங்களின் அயர்ச்சி" என்று நினைக்கிறேன். காட்சி ஊடகம் சார்ந்து நமக்கு நீண்ட வரலாறு உண்டு. நாம் இப்போது வெவ்வேறு தொடர்பு வடிவங்களை நோக்கி செல்கிறோம். காட்சி மட்டும் அல்ல, ஒலி/பேச்சு நோக்கியும் செல்கிறோம், நாம் ஒலியை மறுகண்டுபிடிப்பு செய்கிறோம், அதிவேக தொழில்நுட்பங்கள் பற்றி பேசுகிறோம். இன்றைய துவக்கம் பறையுடன் ஒரு அதிவேக அனுபவத்தை தந்தது, அதை அனுபவிப்பதிலேயே அதன் சக்தி உள்ளது, அதை காட்சிப்படுத்த முடியும் என எனக்கு தோன்றவில்லை. டிஜிட்டல் சூழ் ஒலியில் இதை காட்சிபடுத்தினாலும் இதே அனுபவம் கிடைக்காது.

தொடர்பு முறை முற்றிலும் புதிய பகுதிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான இளைஞர்கள், இங்கு இருப்பவர்களையும் சேர்த்து, டிஜிட்டல் பூர்விகத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். என்னைப் போல் இல்லாமல், கைப்பேசி, கேமரா கைப்பேசி, குறுஞ்செய்தி, ஃபேஸ்புக், சமூக ஊடகம் மற்றும் மல்டிமீடியா திறன்களுடனே பிறந்திருக்கிறார்கள். ஆசிய இதழியியல் கல்லூரியின் மாணவர்களைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக தோன்றுகிறது, மாணவர்கள் தொழில்நுட்பத்தை மூன்று அல்லது நான்கு நாட்களில் கற்றுக்கொள்கிறார்கள். ஒரு வாரத்திருக்குள் படத்தொகுப்பு செய்ய தொடங்கிவிடுகிறார்கள், ஆனால் எவ்வளவு படைப்பாற்றலுடன் என்பது வேறு விஷயம். அதனுடனே பிறந்தது போல், தொழில்நுட்பத்தில் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த மாற்றத்தின் ஒரு துணையான அம்சமே "படிமங்களின் அயர்ச்சி" என்று நினைக்கிறேன்.

ஜாக் ரேன்சியர் (Jack Ranciere) "படிமத்தின் எதிர்காலம்" [Future of Image] என்ற அற்புதமான புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் படிமங்களுக்கு என்னவாகும், படிமத்தின் உட்பொருள் என்ன, இப்போது இருப்பது போன்று பிற்காலத்தில் எவ்வளவு சக்திவாய்ந்ததாக படிமங்கள் இருக்கும் போன்ற கேள்வியை எழுப்புகிறார். டிஜிட்டல்மயமாக்கத்தின் விளைவினால், பலதரப்பட்ட அனுபவத்திற்கு நாம் நகர்ந்திருக்கிறோம். சமகால தொடர்பு முறையில் (படிமம் என நாம் கொள்வோம்) இது எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது சுவாரசியமான கேள்வியாகும். நிச்சயமாக மொழி மாறி வருகிறது என்று தெரிகிறது, அச்சு மொழி மாறி வருகிறது, அச்சு ஊடகத்திற்கு மிகப் பெரிய சவால் இப்போது இருக்கிறது. செய்திதாள் என்று மட்டுமல்ல, படிக்கும் பழக்கம், டேப்ளேட் அந்த இடத்தை நிரப்புகிறது என்பது முக்கியம்.

கணிசமாக மாறிவரும் மொழிகள் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. தொடர்பு முறைகள் சார்ந்த உண்மைகள், தொடர்பு மொழி, ட்விட்டரின் தகவல்கள், ஃபேஸ்புக் மொழி சார்ந்த தகவல், அச்சு முறையை உரையாடல் மொழி சார்ந்தவை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பழைய அச்சு முறையில் இப்போது எழுதினால், அது தெளிவற்றதாக தெரிகிறது. பேச்சு மொழி உரையாடல் சார்ந்தவை மீண்டும் புழக்கத்தில் வந்திருக்கிறது. அதேபோல படிமங்களின் அயர்ச்சி குறித்த கேள்வி சுவாரசியமானதாக இருக்கும் என நினைக்கிறேன். என் பார்வையில் தற்காலத்தின் பெரிய சவால்களில் ஒன்றாக இது இருக்கும்.

ஒருபுறம் தகவல்கள் பல பரிமாணத்தில் கிடைக்கிறது, ஆனால் உண்மையில் பார்க்கும் செய்தியின் காட்சிகள் பொறுத்தமட்டில் நடப்பது என்னவென்றால், சாதாரண ஊடகமட்டுமல்ல, முறைசாரா ஊடகங்கள் மூலம், தொழில் முனைவோர் மூலம், தனியார் முயற்சிகள் மூலம், சிவில் சமூக குழுக்களின் உறுப்பினர்கள் மூலம், யுடியுப்பில் பதிவேற்றுவதன் மூலம், ஃபேஸ்புக்கில் படிமங்களாக அல்லது காட்சிகளாக பதிவிடுவதன் மூலம், என்ன நடக்கிறது என நாம் பார்க்க முடிகிறது, குழந்தைகள் எப்படி கொள்ளப்படுகிறார்கள் என பார்க்க முடிகிறது, காஸாவில் என்ன நடக்கிறது, ஈராக்கில் என்ன நடக்கிறது, உலகின் பல்வேறு பகுதிகளில் என்ன நடக்கிறது என பார்க்க முடிகிறது. அநீதி இருக்கும் இடத்தில், போர் நடக்கும் இடத்தில், சமூதாயத்தில் வன்முறை நிகழும் இடத்தில் என அனைத்தையும் நாம் பார்க்க முடிகிறது. முன்னெப்போதைவிட சூழ்நிலை குறித்த தேவை இப்போது இருக்கிறது, முன்னெப்போதைவிட பார்வை குறித்த தேவை இப்போது இருக்கிறது, முன்னெப்போதைவிட இப்போது நாம் எதிர் கொள்ளும் படிமங்களுக்கு(மிகப்பெரிய குவியலுக்கு), சூழ்நிலை மற்றும் பார்வை குறித்த தேவை இருக்கிறது.

1970'களில் கைய் டெபோர்ட் (Guy Debord) என்று நினைக்கிறேன், பிரபலமான அறிக்கை ஒன்றை எழுதினார். காட்சிகளான சமூகம் என்பது குறித்து அதில் பேசினார், காட்சி குவியலாகவே நவீன சமூகத்தின் வரையறை இருக்கும் என்றார். அவர் முன்னோக்கி சிந்தித்தார். மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மக்கள் இன்று டெபோர்டை சென்றடைகிறார்கள், ஆம் காட்சிகளின் குவியலாகவே இருக்கிறது என ஒப்புக்கொள்கிறார்கள். டெபோர்ட்டின் காட்சி குவியலை மார்க்சிஸ்டுகளின் செல்வ குவியல் கருத்திற்கு ஒப்பிடுபவர்களும் உண்டு. சமகால யதார்த்தைப் பொருத்தமட்டில் படிமங்கள் நம் வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. எப்படி படிமங்களுடன் தொடர்பு படுத்தி பார்க்க போகிறோம், படிமங்களுடனான நமது ஈடுபாடு எவ்வாறு இருக்கும் என்பது பெரிய பிரச்சினை.

பரிமாற்றத்திற்கான புதிய மொழிகளுக்கு செயற் பரப்பு இப்போது இருக்கிறதா?. தொழில்நுட்ப கூறுகளால் பரிமாற்றத்திற்கான புதிய மொழிகள் சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களின் வடிவம் மொழியை தீர்மானிக்கிறது. மொழி பற்றிய சவால் தினமும் சந்திக்ககூடிய ஒன்றாகும், இதை ஏற்றுக்கொண்டு நாம் மொழியின் வடிவத்தைப் புதிதாக்க வேண்டும் என்பதே காலத்தின் கேள்வியாகும். இங்கு தான் ஆனந்த் பட்வர்தன் சரியாக பொருந்துகிறார், ஒரு திரைக்கலைஞனாக அவரிடம் பேசும் போது அது மிகவும் குறிப்பிடத்தக்கதாக எனக்கு தோன்றுகிறது.

அவரது படிமங்களை பார்க்கும் போது, இவை மறைந்துவிடுபவை அல்ல, என்றும் நிலைத்திருக்கும் என தெரிகிறது. அதில் ஒரு புதிய உணர்ச்சியும் இருக்கிறது. அநீதி குறித்து அவர் பேசுகிறார், பிரித்துப்பார்க்கும் ஒட்டு மொத்த சமுதாயமே அதன் அடிப்படையாகும். காட்சிகள் மூலம் நமது சமூக உணர்வை தாக்குகிறார். மொழிகள் மற்றும் படிமங்கள், அடிப்படையில் அதிகரித்து வருவது பொறுமை இல்லா ஒரு சூழ்நிலையை கொண்டு வரும். மிகவும் முக்கியத்துவமானதென இதை நான் நினைக்கிறேன். ஏதாவதொன்றின் மையத்துக்கு செல்வது என்பதற்கு அதிக தேவை இருக்கும், ஏனெனில் நாம் வேகமான ஒரு சமுதாயத்தில் வாழ்கிறோம்.

ஆனந்த் பட்வர்தன் இரண்டு பகுதிகளாக ஓடும் மூன்று மணிநேர படமான ஜெய் பீம் காமரேட்டை எடுத்து, அதில் தொடர்ந்து நம்மை ஈடுபடவும் செய்கிறார். இரண்டைரை மணிக்கு மேல் திரைப்படத்தை (feature film) எடுக்க துணிவு இருக்காது. பார்வையாளர்களைத் தக்கவைக்க வன்முறை மற்றும் ஏதோவொன்றை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் காட்டவேண்டியிருக்கும். கால்த்தின் முரண்பாடு என இதை நினைக்கிறேன், நாம் ஈடுபட வேண்டிய நீடித்திருக்கும் சக்தி வாய்ந்த பிரச்சனைகள் பல உள்ளன, ஆனால் மறுபுறம் புத்ததேவ் கூறியது போன்ற புதிய திரை கலைஞர்கள் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் இருக்கும் புதிய கலைஞர்கள் ஒரு சிலர் மகத்தான ஆற்றல் பெற்றவர்கள். தமிழ் சினிமா போன்று இந்தியளவில் எவரிடமும் ஆற்றல் இல்லை என்றே நினைக்கிறேன், இந்தி சினிமாவிலும் இல்லை. கொரியன், ஜப்பான் அல்லது வேறெங்கேனும் இருந்து எடுக்கப்பட்ட படம் இங்கு உண்டு, ஆனால் உள்ளூர் சார்ந்த உண்மையான படங்களும் இங்குண்டு. இது போன்ற படங்களுக்கு மிகப்பெரிய பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்த அரங்கமே அதற்கு ஒர் சாட்சி, மாற்று சினிமாவிற்கு கூடியுள்ள கூட்டம் இது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாற்று சினிமா பொது தளத்திற்கு வந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். நம் வாழ்வின் முக்கிய பங்காக இது இருக்கிறது.

சென்னையின் 375 ஆண்டு கொண்டாடும் இந்த வேலையில், சென்னை குறித்த வரலாற்றை படித்துக்கொண்டிருந்தேன். உண்மையில் என்னில் இது தாக்கம் ஏற்படுத்தியது, இதற்கு முன் எனக்கு தெரியாதது, இது குறித்து அதிகமாக பேசியதுமில்லை. பதினேழாம் நூற்றாண்டில் சென்னை முறையாக தொடங்கப்பட்டது. சிறிய சென்னைப்பட்டினம் விரிவடைய தொடங்கியது. கருப்பர் மற்றும் வெள்ளையர் நகரம் என இருந்தது. கிராமத்திலிருந்து மக்கள் சென்னைக்கு வர துவங்கினர், இரண்டரை அல்லது மூன்று லட்சம் அப்போது மக்கள் தொகையாக இருந்திருக்கும். சென்னை பட்டனம் அல்லது பட்டனம் அல்லது சோழ மண்டலம் என பல காலக்கட்டங்களில் பல பெயர் வழக்கு இருந்தது. மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் கிராமப்புறத்திலிருந்து வந்த பறையர்கள், வீட்டு வேலை மற்றும் இருப்பிடத்தை சுத்தப்படுத்தல், சுகாதாரத்தை பாதுக்காத்தல் போன்ற குடிமை தேவைகளை செய்து வந்தனர். ஐந்தில் ஒரு பகுதி மக்கள் ஐரோப்பியர்கள் மற்றும் அவர்களுடன் வணிக தொடர்பு கொண்ட சாதிகளின் நலனுக்காக பணி செய்தனர்.

கிராமம் மற்றும் நகரத்துக்கிடையில் அலுவலிருந்துக் கொண்டே இருந்தது. சென்னையின் பின்னனி, நமது சமகால வெகுஜன கலாச்சாரத்தில் ஓரளவு பிரதிபலிக்கிறது. நமது பொது நீரோட்ட தமிழ் சினிமாவில் இருப்பது போன்ற கிராமிய மனம் வேறெந்த இந்திய சினிமாவிலும் கிடையாது. இந்தி சினிமாவில் கிராமியம் என்பது இருப்பதேயில்லை, பம்பாய் மற்றும் நியுயார்க் அல்லது வேறு நாட்டு நகரங்கள் சார்ந்தவைதான் இருக்கிறது. கிராமியம் மனம் எப்போதும் சரியென்று நான் சொல்லவில்லை, கட்டபஞ்சாயத்தை கொண்டாடும் நிலை, இதை வேறெந்த இந்திய சினிமாவிலும் பார்க்க முடியாது. வாழ்ந்த அனுபவத்தை சில நேரத்தில் இந்த கிராமிய வகை படம் கொடுக்கிறது.

என் மனதில் தோன்றிய சில எண்ணங்கள் இவை. ஆனந்த் பட்வர்தனுக்கு எனது பாரட்டையும் வாழ்த்தையும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த விருது மிகவும் முக்கியமானது, ஏனெனில் ஈடுபாடு மிக்க ஒரு குழுவிடமிருந்து வருகிறது. பெரும்பாலானவர்களை நாம் இன்று பார்த்தோம், ஆனந்த் பட்வர்தனை கொண்டாட முடிவுசெய்திருக்கின்றனர். ஆனந்தும் இந்த விருதின் முக்கியத்துவத்தை என்னை போலவே நினைக்கிறார் என நம்புகிறேன்.

ஜெய் பீம் காம்ரேட் திரைப்படத்தில், மிகப்பெரிய தலித் கூட்டம் மாநகரில் தங்கள் விழாவை கொண்டாட வருகிறார்கள், அங்கிருப்பவர்களுக்கு அது பெரிய பிரச்சனையாக உள்ளது, அங்கு வருவதை தொல்லையாக கருதுகிறார்கள், இடத்தை நாசம் செய்துவிடுவார்கள், ஆனால் அவர்கள் அதை சுத்தப்படுத்திவிட்டே செல்கிறார்கள். படத்தில் ஒரு காமிக் விவரிப்பு போல் இந்த காட்சிகள் அமைந்திருக்கும், மக்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்ற நிகழ்வு, அவர்கள் எவ்வளவு சுயநலவாதிகளாக இருக்கிறார்கள் என அவர்களுக்கே தெரியவில்லை. இங்கு வருபவர்கள் அதிக குப்பை உருவாக்குவார்கள், அவர்கள் அதிகம் சாப்பிடவார்கள் என்று அங்கிருப்பவர்கள் கூறுவது போன்ற காட்சிகள் வரும். நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்க மக்களிடமே இப்படியான கருத்துகள் உள்ளது, இந்த பிரச்சினை குறித்த புரிதலும் உணர்வும் அவர்களுக்கு தேவைப்படுகிறது.

தலித் இயக்கம் மிகவும் முக்கியமான ஒன்றாகும், சவாலான ஒன்றும் கூட. எனக்குள் இது குறித்து குழப்பம் உள்ளது. காந்தி தலித்களின் முன்னேற்றத்திற்கு உதவினாரா அல்லது அம்பேத்கர் உதவினாரா என்பது குறித்த உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது. அருந்ததி ராய், காந்தியைவிட அய்யன்காளி முக்கியமானவரா இல்லையா என்பது குறித்து பேசுகிறார். காந்தி அம்பேத்கரை அரசியலமைப்பு சட்டத்தை எழுத வழிவகுத்தார், அதனால் காந்தி அம்பேத்கருக்கு ஒப்புதல் அளித்தார் என்று கருதலாம். ஆனால் இது குறித்து வெவ்வேறு நிலைபாடு உள்ளது, இது தொடர்ந்து வளர்ந்து வரும் அரசியல் வகை. இது போன்ற திரைப்படத்தில் இது மாதிரியான அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனந்த் பட்வர்தனுக்கும் அவரது திரைப்பட உருவாக்கத்திற்க்கும் அதிக சக்தி கிடைக்கட்டும் என்று கூறி முடிக்கிறேன். கடந்த இருபது ஆண்டுகளைப் போல் தொடர்ந்து மற்றவர்களுக்கு (முக்கியமாக இளம் தலைமுறையினருக்கு) ஊக்கமாக ஆனந்த் இருப்பார். நன்றி

அடுத்த இதழில் தொடரும்...

தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது 2014 - காணொளி (Video)

பகுதி 1 : https://www.youtube.com/watch?v=raPqUg2XpEk

பகுதி 2: https://www.youtube.com/watch?v=YdPCXCJAUwY

பகுதி 3: https://www.youtube.com/watch?v=CyndXYhRXms

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </