உலக சினிமா சாதனையாளர்கள் - 3 -இங்மர் பெர்க்மன் - அம்ஷன் குமார்
 
 
 

இந்திய சினிமா வரலாறு – 3 - பி.கே. நாயர்

 
 
  ஒரு சகாப்தத்தை மீட்கும் பணி - தமிழில்: அம்ஷன் குமார்
 
 
   

பிரசன்ன விதானகேவின் "வித் யூ விதவுட் யூ" - யமுனா ராஜேந்திரன்

ராணுவம் குறித்த பார்வைகள் என்பதும் அனுபவங்கள் என்பதும் தெற்கு இலங்கையில் இருந்து முற்றிலும் வித்தியாசமான வகையிலேயே வடகிழக்குத் தமிழர்களுக்கு இருக்கிறது. சிங்கள ராணுவம் என்பது தமிழ் மக்களைப் படுகொலை செய்யும் ஒரு ஆயுத இயந்திரம் என்பதும், தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் வல்லுறவு புரியும் ஒரு அரக்கர் கூட்டம்தான் சிங்கள ராணுவம் என்பது இம்மக்களின் அனுபவம். இதுவரையிலான சிங்கள ராணுவம் குறித்த சிங்க மொழிப் படங்களில் இப்பிரச்சினையைத் தொட்டுப் பேசியவை இரண்டே இரண்டு படங்கள்தான். ஓன்று அசோக ஹந்தகமாவின் இது எனது சந்திரன், மற்றையது பிரசன்ன விதானகேவின் வித் யூ விதவுட் யூ அல்லது உன்னோடும், நீ இல்லாமலும் திரைப்படம். சிங்கள சமூகத்தில் பிரசன்ன விதானகேவின் இடத்தை இந்த அளவில்தான் மதிப்பிட வேண்டும்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 4 - தினேஷ் குமார்

ஒருமுறை என்.எஸ்.கே. அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு புகைப்படம் எடுப்பதற்காகச் சென்றிருந்தேன். புகைப்படம் எடுக்கையில் வெளிச்சம் போதாக்குறையாக தெரியக்கூடாது என்பதற்காக, தனியாக காமிராக்களுக்கான விளக்குகள் வாங்கி வைத்திருப்பேன். ஆனால், அன்றைக்கு நான் தயார் செய்து வைத்திருந்த விளக்குகள் திடீரென்று பழுதாகிவிட்டது. நான் புகைப்படங்கள் எடுப்பதில் கவனம் செலுத்தாமல், விளக்குகளை சீரமைப்பதிலேயே ஈடுபட்டிருந்தேன். அவையில் இருந்தோர்கள் எல்லோரும் என் செய்கைகளைப் பார்த்து சிரிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் நான் அங்கு கேலிக்குள்ளாக்கப்பட்டேன். எனக்கும் அந்நிலைமை சங்கடத்தையே உண்டுபண்ணியது. என்.எஸ்.கே என்ன சொல்வாரோ? என்ற பயம் ஒருபக்கம், பிறருடைய ஏளனத்திற்கு ஆளாகிவிட்டோமே என்ற எண்ணம் மறுபக்கம். என்.எஸ்.கேயின் அருகில்தான் மதுரம் அம்மையார் அமர்ந்திருக்கின்றார்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
With you Without you - ஒரு களப்பணியாளனின் நேரடி அனுபவம் - தமிழ் ஸ்டுடியோ அருண்

நான் முன்னமே பார்த்து வியந்த ராபர் ப்ரெசனின் "The Gentle Women", மற்றும் மணி கவுலின் "Nazar" இரண்டு திரைப்படங்களும் தஸ்தாயெவ்ஸ்கியின் "The Gentle Creature", குறுநாவலின் திரைவடிவங்கள். இந்த குறுநாவல் மனிதனின் ஆழ்மனதில் இருக்கும் காதல், பொருளாசை, அவசர உலகின் எதார்த்த நிகழ்வுகள் போன்றவற்றை மிக சிறப்பாக உணர்வுகளால் வடித்திருக்கும். இந்த நாவலின் மேல் இருந்த...



  மேலும் படிக்க
 
 
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 5 - பால் க்ரானின் :: தமிழில்: எஸ்.ஆனந்த்

திரைப்படம் எடுக்கும் ஒவ்வொருவரும் ஒரு அளவுக்காவது உடல்வலிமை கொண்டவராக இருப்பது அவசியம். ஏனென்றால் சினிமா வெறும் அறிவுசார் உத்திகளைக் கொண்டு மட்டும் உருவாக்கப்படுவதல்ல. அது உங்கள் கால்கள், முழங்கால்களின் பலத்தைக் கொண்டு உருவாகிறது. இருபத்திநான்கு மணி நேரமும் உழைப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும். திரைப்பட உருவாக்கத்தில் எந்த அனுபவமும் இல்லாத விமர்சகர்களைத் தவிர திரைப்படத்தை...

  மேலும் படிக்க
       
 
 
கண்ணாடியறையிலிருந்து எறியப்படும் கல் - தினேஷ் குமார்

செழியன் சிறுபத்திரிக்கைகளிலும் தொடர்ந்து எழுதுவதில் முனைப்புடன் இருப்பவர். ”பேசும் படம்”, ”உலக சினிமா”, என்கிற தலைப்புகளில் புத்தகம் எழுதியிருப்பது இவரது தனித்த அடையாளங்களில் சில. தான் பார்த்து, அனுபவித்த, உணர்ந்த செய்திகளை மட்டுமே ஆதாரங்களாய்த் திரட்டிக்கொண்டு செழியன் எழுதியிருக்கின்ற மற்றொரு புத்தகம்தான் உயிரெழுத்து வெளியீடான ‘முகங்களின் திரைப்படம்’. இந்தப் புத்தகத்தில் மட்டும் அவர் “சில்ட்ரன் ஆப் ஹெவன்”படத்தை அடிக்கோடிடும் வகையில் அதிகமாக ஏதும் எழுதவில்லை.

  மேலும் படிக்க
 
 
பிரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல் - விஸ்வாமித்திரன், தமிழில்: அஜீதன், சித்ரா.

திரைப்பட இயக்குநரான பிரசன்ன விதானகே தமது போருக்கெதிரான அரசியல் பார்வைகளால் இலங்கைத் திரைப்பட வரலாற்றில் போராட்ட குணம் வாய்ந்த படைப்பாளியாக மதிக்கப்படுகிறார். நாடகங்களுடனான ஈடுபாட்டில் எழுச்சிகொண்டது அவரது கலைத்துவக்கம். அதன் தொடர்பங்களிப்பாக 1986-ல் பெர்னாட்ஷாவினுடைய arms and the man என்ற நாடகத்தை மொழிபெயர்த்தார். 1991ல் டேரியா ஃபோவினுடைய aspberries and trumpets நாடகத்தை ...



  மேலும் படிக்க
   
 
 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome