ஏகாதிபத்தியப் பார்வையில் போராட்டம், புரட்சி, தீவிரவாதம் - டி.டி.ராமகிருஷ்ணன்
 
 
 

இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 6 - தம்பிஐயா தேவதாஸ்

 
 
  விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் - 8 - தினேஷ் குமார்
 
 
   

கோவிந்த் நிஹ்லானி - யமுனா ராஜேந்திரன்

வெகுஜனதளத்தில் முற்றிலும் சிதைவு பெற்ற தேசிய, மத, இன வன்முறை தொடர்பான அரசியல் திரைப்படங்களுக்கு மாற்றாக முற்றிலும் பிரக்ஞைபூர்வமான நிலையில் தொடர்ந்து அரசியல் திரைப்படங்களை உருவாக்கி வருபவர் கோவிந்த் நிஹ்லானி. ஸியாம் பெனிகலின் நிஷாந்த் ஆங்கூர் பொனற படங்களிலும் டேவிட் அட்டன்பரோவின் காந்தி படத்திலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கோவிந்த் நிஹ்லானி 1980 ஆம் அண்டு ஆக்ரோஷ் (1980) படத்தினைத் தானே ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார். உடனடியாகவே தனித்துவம் மிக்க ஒரு இயக்குனராக நிஹ்லானி இனம் காணப்படுகிறார். அவரது ஆக்ரோஷ் திரைப்படம் ஒரு நிகழ்ந்த சம்பவத்தின் அடிப்படையிலான விஜய்தெந்துல்காரின் நாடகத்தினை அடிப்படையாகக் கொண்டதாகும். ஓம்புரி ஒரு மலைவாசியாகவும், அவருக்காக வாதிடும் இனம் வழக்குரைஞராக நஸ்ருதின் ஷாவும் நடித்திருந்த படம் அது.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

உயிர் கொடுக்கும் கலை 13 - டிராட்ஸ்கி மருது

சென்னையிலிருந்து பன்முகத் தன்மையோடு காண்பியல் மொழியில் இயங்கியதில் மிக முக்கியமானவர் சமீபத்தில் மறைந்த ஓவியர் பாப்பு (Baapu) அவர்கள். இவரது இயற்ப்பெயர் சத்திராஜூ லட்சுமி நாராயணா. ஆரம்பத்தில் விளம்பர நிறுவனத்தில் இருந்துக்கொண்டே பத்திரிக்கையிலும் இயங்கியவர். ஓவியர், திரை கலைஞர், கலை இயக்குநர். அவரைக் குறித்து தமிழ்நாட்டில் அதிகமாக எழுதியதோ பேசியதோ இதுவரை அதிகமாக இருக்கவில்லை. ஆந்திராவின் கலாச்சாரமானாலும், மொழி சார்ந்தோ, வெகுஜன பத்திரிக்கைகளானாலும், இலக்கியம்-நாவல் அல்லது அது சம்பந்தமான விஷயமானாலும், எந்த ஒரு பகுதியானாலும், ஆந்திராவைக் குறித்த கடந்த 50 ஆண்டுகளக்குள் நுழைந்து செல்லவேண்டுமாயின் நீங்கள் பாப்புவைக் கடந்துதான் செல்ல வேண்டும். பாப்புதான் வாசலிலே இருப்பவர். தெலுங்கு கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமை அவர்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
திரைமொழி - 12 - Steven D. Katz தமிழில்: ராஜேஷ்

Production Design என்ற துணைப்பிரிவின் மூன்றாவது அம்சம்தான் இந்த கண்டின்யூட்டி டிஸைன். கண்டின்யூட்டி என்றால் என்ன என்று திரைப்படத்துறையில் உள்ளவர்களுக்கு அவசியம் புரியும். காட்சிகளின் தொடர்ச்சியைக் கச்சிதமாகக் கவனிப்பதே கண்டின்யூட்டி. இதில் தனிப்பட்ட ஷாட்கள், கதையில் காட்சிகள் படமாக்கப்படும் விதம், அவற்றில் உபயோகப்படுத்தப்படும் லென்ஸ்கள், ஷாட்களின் வரிசை ஆகியவை முக்கியமான விஷயங்கள்.

  மேலும் படிக்க
 
 
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்

பெரும்பாலானவர்கள், அருங்காட்சியத்தைப் புனித சின்னங்களால் நிறப்பட்டது என்று கருதுகிறார்கள். தங்களை விளக்கி வைக்கிற, காரணங் கூறமுடியாத செல்வத்தின் புதிரான புனித சின்னம். வேறுவிதமதாக சொல்வதெனில், உண்மையான சிறந்த கலை படைப்பு என்பது செழிப்பான பணக்காரர்கள் அழியாது பாதுகாக்கவே (பொருளாதாரரீதியாகவும் ஆன்மிகரீதியாகவும்) என அவர்கள் கருதுகிறார்கள். ஒவ்வொரு சமூக வர்கத்திற்கும் கலை....

  மேலும் படிக்க
       
 
 
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 8 - பால் க்ரானின் :: தமிழில்: எஸ்.ஆனந்த்

சுயாதீனம் என்பதற்கு இங்கு அளிக்கப்படும் அர்த்தம் என்ன? நம் வீடுகளில் நமது குடும்பங்களைக் காமெராவில் படமாகப் பதிவு செய்துகொள்வதை மட்டும்தான் சுயாதீன சினிமாவாகச் சொல்லமுடியும் என்ற நிலையில் இன்று இருக்கிறோம். ஒருமுறை நியூ யார்க்கில் நான் கொண்டுசென்றிருந்த வாடகை வாகனத்தில் காமெராக்களை எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. யூனியன் வாகனம் வரும்வரை காத்திருந்து அதில்தான் கமெராக்களை எடுத்துச்செல்லவேண்டும் என்று என்னைத் தடுத்தார்கள்.

  மேலும் படிக்க
 
 
ஏகாதிபத்தியப் பார்வையில் போராட்டம், புரட்சி, தீவிரவாதம் - டி.டி.ராமகிருஷ்ணன்

பெண்டகனில் திரைப்பட விழாவா ? ஆமாம், 2003 ஆகஸ்ட் 27ல் பிரபல இத்தாலிய இயக்குநர் கீலோ போன்ட்ரிகோவாவின் ‘பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்’ என்ற திரைப்படம் பெண்டகனின் இராணுவத்தினருக்காகத் திரையிடப்பட்ட போது, அமெரிக்காவின் போர் எதிர்ப்பாளர்கள் இப்படித்தான் கேட்டார்கள். பெண்டகன் இராணுவ அதிகாரிகள் இந்தப் படத்தை மிகவும் விருப்பத்தோடு பார்த்ததற்கு, அதன் சிறந்த கலைத்தன்மையோ அல்லது சரித்திரப்பூர்வமான மெய்த்தன்மையோ காரணமல்ல.

  மேலும் படிக்க
   
 
 
 
   
ஆவணப்பட இயக்குனர் & பேராசிரியர் சொர்ணவேல் அவர்கள் பேசாமொழிக்கு எழுதியிருக்கும் கடிதம்.  
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome