தமிழ் ஸ்டுடியோவின் பேச்சரவம் - 1 சினிமா பற்றிய புரிதல் - தினேஷ்
 
 
  தமிழ் ஸ்டுடியோவின் 55வது குறும்பட வட்டம் - தினேஷ்
 
 
  RP அமுதனுடன் ஒரு நேர்காணல் - 2 - - கு. ஜெயச்சந்திர ஹஸ்மி
 
 
   

உயிர் கொடுக்கும் கலை 5 - டிராட்ஸ்கி மருது (எழுத்தாக்கம்: யுகேந்தர்)

சுந்தர பாண்டியனும் (நடிகர் சந்திரசேகரின் அண்ணன்) நானும் ஓவியக் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். இவர்கள் இருவர் மூலமாக எனக்கு மணிவண்ணனுடனான பழக்கம் ஏற்ப்பட்டது. கல்லூரி படிப்பிற்கு பிறகு நாங்கள் தங்கியிருந்த அறையில் சந்திரசேகரும் வந்து சேர்ந்துக்கொண்டான். நாடக அனுபவங்களுக்கு பிறகு சினிமா முயற்சியில் அவன் ஈடுபட்டிருந்தான்.நாங்கள் மூவரும் சுற்றிக்கொண்டிருந்த காலகட்டம். சினிமாவுக்கான முயற்சி, weavers service centre'இல் நான் சேர்ந்தது, ராபர்ட் ராஜசேகரின் படங்கள், அறை வாழ்க்கை என எங்கள் உறவு வளர்ந்தது.பாரதிராஜாவின் இரண்டாவது படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்கும் முயற்சியில் தொடர்ந்து சந்திர சேகர் இருந்த நேரம், அங்கு பாரதிராஜா மூலம் மணிவண்ணனின் அறிமுகம் அவனுக்கு கிடைத்தது.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

கோபால் ராஜாராம் - த காமன் மேன் - யமுனா ராஜேந்திரன்

சோவியத் யூனியனையும் தலிபான் அமைப்பையும் எந்த விமர்சனமும் இல்லாது நான் ஆதரிக்கிறேன் என்று இருவரும் எப்படி முடிவுக்கு வந்தார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. முந்நூறு பக்கத்தில் அரசியல் இஸ்லாம் பற்றி ஆறு ஆண்டுகள் முன்பு உயிர்மை வெளியிட்ட என் நூலில் முப்பத்து ஐந்து பக்கங்களுக்கு சோவியத் யூனியன், அமெரிக்கா, ஆப்கான், தலிபான்களின் அரசியல், இதனோடு இப்பிரச்சினைகள் குறித்த திரைப்படங்கள் என நான் எழுதியிருக்கிறேன். அடையாளம் பதிப்பகம் வெளியிட்ட எனது அரபுப் புரட்சி குறித்த முன்னூறு பக்கநூல் இன்றைய அரசியல் இஸ்லாம் குறித்த எனது பார்வையை முன்வைக்கிறது. இந்து முஸ்லிம் பிரச்சினையும் தேசப்பிரிவினையும் குறித்த திரைப்படங்கள் பற்றிய எனது தனிநூலை உயிர்மை வெளியிட்டிருக்கிறது.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

ராமையாவின் குடிசை - எரிக்கப்படாத உண்மைகள் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

கலை என்பது கலைக்காகவா மக்களுக்காகவா என்ற விவாதம் காலந்தொட்டு இன்றும் நிகழ்ந்தே வருகின்றது. கலையழகியலுடன் உருவாக்கப்பட்ட கலைவடிவங்களும் இன்றுவரை போற்றப்பட்டு வந்தாலும், மக்களுக்காக உருவாக்கப்பட்ட கலைதான் காலங்கள் கடந்து இன்றும் மக்கள் வாழ்வோடு வாழ்ந்து வருகின்றது. நெற்களஞ்சியமாக புகழப்பட்ட தஞ்சாவூரில் நெற்களைத் தவிர்த்து சாதியும் எத்தனை ஆழமாக விதைத்து வளர்க்கப்பட்டது என்பது அரசியல் மறைத்து வரும் உண்மை. வர்க்கம், சாதி, நிலப்பிரபுத்துவம் போன்ற அத்தனை குரூரங்களும் எப்படி 44 உயிர்களை உயிரோடு எரித்துக் கொன்றது என்பதை, சட்டம் தவறவிட்ட உண்மைகளோடு நம் கண்முன்னே கொண்டுவருகின்றது ‘ராமையாவின் குடிசை’ என்னும் ஆவணப்படம்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
பிணங்களை அறுப்பவளின் கதை - எம்.ரிஷான் ஷெரீப்

எந்த மனிதனும் செய்வதற்கு ப்ரியம் காட்டாத தொழில்களெனப் பல உலகத்தில் இருக்கின்றன. ஏமாற்றத் தேவையிராதது. சுய உழைப்பு அதிகமிருக்கக் கூடியது. உடனடி இலாபம் தரக் கூடியது. இப்படிப் பல காரணங்கள் இருந்தபோதிலும் சில தொழில்களை சமூகம் எளிதில் அங்கீகரிப்பதில்லை. எனினும், அவ்வாறான தொழில்களும் கூட யாராலாவது செய்யப்பட்டே ஆக வேண்டும்.

  மேலும் படிக்க
 
 
கனவெனும் குதிரையில் ஏறினேன், இறங்க முடியவில்லை - பிச்சைக்காரன்

தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட சில நம்பிகைக்கள் மூட நம்பிக்கைகளாக மாறி , சுய நலனுக்காக பயன்பட ஆரம்பிப்பது அருவருப்பான ஒன்று. ஆனால் முன்பு ஏதோ ஒரு காலத்தில் ஏதோ சில காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட சில சடங்குகள் , சில நம்பிக்கைகள் இன்று பொருத்தம் அற்று போனால் கூட ஒரு குறியீடாக மட்டுமே நீடித்து வருவதை அன்றாட வாழ்க்கையில் காணலாம். இவற்றை ஒரு வகையில்....

  மேலும் படிக்க
       
 
 
ஒளிப்பதிவாளர் செழியனின் பேசும்படம், நூலின் திறனாய்வு - தினேஷ்

'ஆவணப்பட இயக்குனரும், மாற்று ஊடகம் மற்றும் தீவிர சினிமா குறித்து தொடர்ந்து எழுதிவரும் ஒளிப்பதிவாளர் செழியனின் வார்ப்பான ”பேசும் படம்”, என்னும் புத்தகம் பற்றியது. இப்புத்தகம் காலச்சுவடு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. முற்றிலும் தன் பார்வையிலான சினிமா, ஊடகம், திரைப்படச் சூழல் ஆகியவற்றை சரடாகக்கொண்டு கட்டுரைகளை கோர்த்திருக்கின்றார்.

  மேலும் படிக்க
 
 
பந்தயப் புரவிகள் - தவறிப் போன பந்தயக் குதிரைகள் - வருணன்

மனித மனம் நுட்மானது. பிடிக்குள் அடங்காதது. பல தருணங்களில் அதனை ஒரு காட்டு விலங்கை பழக்குவது போல பழக்க வேண்டிய நிர்பந்தம் மனிதனுக்கு உள்ளது. மனித மனத்தில் எழும் அக சிக்கல்கள் பெரும்பாலும் செயற்கையானதே. இல்லாதவற்றை இருப்பதாய் எண்ணிக் கொள்ளும் பாவனைகளில் இருந்தே பெரும்பாலான செயற்கைத்தனங்கள் தொடங்குகின்றன..

  மேலும் படிக்க
   
 
 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome