இதழ்: 8, நாள்: 15- ஆடி -2013 (July)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 5 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
கோபால் ராஜாராம் - த காமன் மேன் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
திரைமொழி 6 - ராஜேஷ்
--------------------------------

RP அமுதனுடன் ஒரு நேர்காணல் - 2 - - கு. ஜெயச்சந்திர ஹஸ்மி

--------------------------------
தமிழ் ஸ்டுடியோவின் பேச்சரவம் - 1 சினிமா பற்றிய புரிதல் - தினேஷ்

--------------------------------

ராமையாவின் குடிசை - எரிக்கப்படாத உண்மைகள் - கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

--------------------------------
பிணங்களை அறுப்பவளின் கதை - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
ஒளிப்பதிவாளர் செழியனின் பேசும்படம், நூலின் திறனாய்வு - தினேஷ்
--------------------------------
கனவெனும் குதிரையில் ஏறினேன், இறங்க முடியவில்லை - பிச்சைக்காரன்
--------------------------------
பந்தயப் புரவிகள் - தவறிப் போன பந்தயக் குதிரைகள் - - வருணன்
--------------------------------
தமிழ் ஸ்டூடியோவின் 55ஆவது குறும்பட வட்டம் - தினேஷ்
--------------------------------
 
   
   


திரைமொழி - 5

முதல் பாகம் – Visualization – The Process

அத்தியாயம் 3 – Storyboards (தொடர்ச்சி)...

film directing
shot by shot
visualizing from concept to screen

Steven D. Katz         தமிழில்: ராஜேஷ்

ஸ்கெட்ச் ஆர்டிஸ்ட் என்பவர், ஸ்டோரிபோர்டுகளில் அவரது ஸ்கெட்ச்களை திரைப்படத்தில் வரக்கூடிய லொகேஷன்களின் புகைப்படங்களை வைத்து உருவாக்குவார். இந்த லொகேஷன்களை தேர்ந்தெடுப்பவர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் ப்ரொடக்‌ஷன் டிஸைனர் ஆகியோர். சில நேரங்களில் ஸ்கெட்ச் ஆர்டிஸ்ட்டே அந்த லொகேஷன்களுக்கு சென்று, ஸ்டோரிபோர்டுக்குத் தேவையான புகைப்படங்கள் எடுப்பதும் உண்டு. ஒரு உதாரணமாக, La Bamba (1987) என்ற திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். அந்தப்படம், ராக் & ரோல் இசையில் குறிப்பிடத்தக்கவரான ரிட்சீ வேலன்ஸ் (Ritchie Vallens) என்பவரைப் பற்றிய படம். சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்த ப்ரொடக்‌ஷன் இல்லஸ்ட்ரேட்டரான பால் பவர் (Paul Power) தான் இந்தப்படத்துக்கு ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட். ரிட்சீ வேலன்ஸ் மெக்ஸிகோவில் வாழ்ந்ததால், அவர் சுற்றத்தாரோடு பழகிய இடங்கள், வேலன்ஸ் நடமாடிய தெருக்கள் ஆகிய இடங்களுக்கு பவர் சென்றார். மெக்ஸிகன் கலாச்சாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். பல மாதங்களுக்கு ஸ்டோரிபோர்டுகளில் வேலை செய்து, படப்பிடிப்பின்போதும் குழுவினரோடு இருந்து, ஸ்டோரிபோர்டுகளில் மாற்றங்கள் செய்து, தத்ரூபமான ஸ்டோரிபோர்டுகளுக்கு காரணமாக இருந்தார். இதன்மூலம் படத்தின் ஷாட்கள் இன்னமும் துல்லியமாக படமாக்கப்பட்டன.

தற்காலத்தில், பொதுவாக ஒரு திரைப்படத்தின் பட்ஜெட்டை குறைக்கவேண்டும் என்றால் முதலில் கைவைக்கப்படுவது ப்ரொடக்‌ஷன் டிஸைன் என்பதால், ‘La Bamba’ போன்ற ஒரு லோ பட்ஜெட் படத்தில் பால் பவரின் அனுபவம் பிறரால் பொறாமைப்படத்தக்கது. காரணம், தற்காலத்தில் தங்களது ஸ்டோரிபோர்ட்களை மெருகேற்றுவதற்கு தேவையான நேரம், ஆர்டிஸ்ட்களுக்கு அளிக்கப்படுவதில்லை. ஸ்டுடியோக்கள் ஆதிக்கம் செலுத்திவந்த பழங்காலத்தில், ஆர்டிஸ்ட்கள் இன்றியமையாதவர்களாகக் கருதப்பட்டனர். அதேபோல் ப்ரொடக்‌ஷன் டிஸைனுக்கும் அதிக பட்ஜெட்டும் நேரமும் ஒதுக்கப்பட்டது. இதனால் தற்போது பல ஸ்டோரிபோர்ட் டிஸைனர்கள், முழுதாக மெருகேற்றப்படாத ஸ்டோரிபோர்ட்களையே ஹாலிவுட்டில் பல ஸீன்களில் உபயோகிக்கிறார்கள் என்று தெரிகிறது. இது, பல சமயங்களில் ஒட்டுமொத்த திரைப்படத்தின் தரத்தையே குறைக்கக்கூடும்.
இதோ – La Bamba படத்துக்காக பால் பவர் வரைந்த ஒருசில ஸ்டோரிபோர்ட்களை இனி பார்ப்போம்.



ஸ்டோரிபோர்ட்களின் ஸ்டைல்

அடுத்து வரப்போவது, Citizen Kane (1941) திரைப்படத்தின் சில ஸ்டோரிபோர்ட்கள். முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் எப்படிப்பட்ட தயாரிப்பு முறை இருந்துவந்தது என்பதற்கு இந்த ஸ்டோர்போர்ட்கள் உதாரணம். கூடவே, கண்டின்யூட்டி என்று சொல்லக்கூடிய அறுபடாத இடைவிடாத தொடர்பை எப்படியெல்லாம் இந்த ஸ்கெட்ச்கள் விளக்குகின்றன என்பதும் தெரியும். அதேபோல், ஒரு ஸீக்வென்ஸ் நமக்குப் புரியவைக்கும் mood என்பதையும் நாம் இவைகளைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். ஆனால் ஒரு பிரச்னை என்னவென்றால், அக்காலத்தில் ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட்கள் தங்களது படைப்புகளின் கீழ் கையெழுத்திட அனுமதிக்கப்படவில்லை. இதனால்தான் அக்காலத்தின் பல ஸ்கெட்ச்களை குறிப்பிட்ட ஒரு நபரோடு மட்டும் நாம் பொருத்தமுடியாமல் போகிறது. எனவே, கீழே ஒரு ஸ்டோரிபோர்டின் கீழ் இயக்குநர் ஆர்ஸன் வெல்ஸ் (Orson Welles), ஆர்ட் டைரக்டர் வான் நெஸ்ட் போல்க்ளாஸ் (Van Nest Polglase) மற்றும் அவரது உதவியாளர் பெர்ரி ஃபெர்குஸன் ஆகியவர்களின் பெயர்களை நாம் கண்டாலும், உண்மையில், பெர்ரி ஃபெர்குஸன் தான் அந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டராக இருந்தார். இயக்குநர் ஆர்ஸன் வெல்ஸ் ஸீன்களை உருவாக்கும்போது அவருடன் மிகவும் நெருக்கமாக வேலைபுரிந்தவர் ஃபெர்குஸனே. அதனால்தான் அவைகளை அதன்பின் ஸ்டோரிபோர்ட்கள், செட் வரைபடங்கள் மற்றும் ஸ்கெட்ச்களாக ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட்களை வைத்து வரைய அவரால் முடிந்தது. போல்க்ளாஸ் அவரது மேலதிகாரி என்பதால் சில அலுவலக சம்மந்தமான வேலைகளில் மட்டும் அனுமதியளித்ததோடு சரி.
’Citizen Cane’ திரைப்பட உருவாக்கம் பற்றி ராபர்ட் கேர்ரிஞ்ஜர் (Robert C. Carrinjer) உருவாக்கிய ஆவணப்படத்தில், அந்தத் திரைப்படத்தில் மொத்தம் ஐந்து ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. சார்லஸ் ஓமேன் (Charles Ohmann) என்பவர் முதன்மை ஸ்கெட்ச் ஆர்டிஸ்ட். இவரைத் தவிர, அல் அப்பாட் (Al Abbott), லாட் கில்லிங்வாட்டர் ஜூனியர் (Claude Gillingwater Jr), ஆல்பர்ட் பைக் (Albert Pyke), மாரிஸ் ஸுபரானோ (Maurice Zuberano) ஆகியவர்கள், ஸ்கெட்ச்கள் மற்றும் க்ராஃபிக்ஸ்களை முடித்தவர்கள் என்று தெரிகிறது. அதேசமயம், இன்னும் சிலர் கூட இவற்றில் பணிபுரிந்திருக்கலாம் என்றும் விளங்குகிறது. காரணம், அக்காலத்தில் வேலை எதுவும் அப்போதைக்கு இல்லை என்றால், பிறரும் வந்து உதவி செய்யும்பொருட்டு இவ்வேலைகளில் பங்கு பெறுவதுண்டு என்றும் அறிகிறோம்.


Click the image to see larger

Click the image to see larger



Click the image to see larger



Click the image to see larger


இந்த வரிசையின் முதல் ஸ்டோரிபோர்ட், படத்தில் வரும் தாட்சர் நூலகத்தின் ஸீக்வென்ஸ். செட்டின் டிஸைன், mood, லைட்டிங் ஆகியவற்றை கவனியுங்கள். படத்திலும் கிட்டத்தட்ட இதேபோன்றுதான் இவை அமைக்கப்பட்டன.

இரண்டாவது ஸ்டோரிபோர்ட், கண்டின்யுட்டி பற்றியது. படத்தில் ஆனால் இந்தக் கட்சி இடம்பெறவில்லை. கேனின் கார்டியனான ஃபைனான்ஸியர் வால்டர் தாட்சர் என்பவரின் விவரிப்பு இது. கேனை தாட்சர் ரோமில் கேனின் 25வது பிறந்தநாளின்போது சந்தித்த அனுபவம். ஒவ்வொரு படத்துக்கும் கீழே இருக்கும் விவரிப்புகள், அந்த ஸீனின் அடிப்படை ஆக்‌ஷன்கள் பற்றியும், கேமரா கோணங்கள் பற்றியும், ஒவ்வொரு ஷாட்டும் அடுத்த ஷாட்டுக்கு மாறுவது பற்றியுமானவை.
மூன்றாவதில், சூஸன் அலெக்ஸாண்டரை கேன் முதன்முதலில் சந்திக்கும் ஸீன் விவரிக்கப்பட்டிருக்கிறது. படத்திலும் இந்த ஸீன் அப்படியே இருந்தாலும், கேமரா கோணங்கள் மட்டும் படத்தில் மாற்றப்பட்டிருக்கும்.

அடுத்த இரண்டு ஸ்டோரிபோர்கள், ஒரே ஸீனை இரண்டுவிதமாக விவரிக்கின்றன. முதலில் இருப்பது, முதன்முதலில் எழுதப்பட்ட ஸீன். அதன்பின் அந்த ஸீனே மேஎலும் செம்மைப்படுத்தப்பட்டபின்னர் இன்னும் அருமையாக இரண்டாம் ஸ்டோரிபோர்டில் வரையப்பட்டிருக்கிறது. திரைப்படத்தின் மிகப் பிரபலமான காட்சி இது. அந்தக் காட்சியில், காமெரா, க்ரேனின் மூலமாக ஒரு குறிப்பிட்ட காபரேவின் உச்சியில் இருந்து கேனும் சூஸனும் அமர்ந்திருக்கும் மேஜைக்கு வரும். இந்தக் காட்சி உண்மையில் ஒரு மினியேச்சர் காபரே கூரையின் காட்சியையும், அதன்பின் எடுக்கப்பட்ட கேனும் சூஸனும் அமர்ந்திருக்கும் காட்சியையும் டிஸால்வ் மூலம் இணைக்கும் காட்சியாகும்.
முதல் ஸ்டோரிபோர்டுக்கும் இரண்டாம் ஸ்டோரிபோர்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தை நீங்களே பார்க்கலாம். அதேபோல், திரைப்படத்தையும் பார்த்தால், இந்தக் காட்சிகளுக்கும் திரைப்படத்தில் அது அடுக்கப்பட்ட விதத்துக்கும் இருக்கும் வேறுபாட்டையும் அறிந்துகொள்ளலாம்.

இந்த ஸ்டோரிபோர்ட்களின் வலதுபுறம், அந்த ஸீனின் வரைபடத்தையும் காணலாம். இது, டிஸைனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும், அந்தக் காட்சியின் தொழில்நுட்பங்களை முடிவுசெய்ய மிகவும் உதவும்.

அடுத்து, ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் ‘The Birds ( ) திரைப்படத்தின் ஸ்கெட்ச்களை பார்க்கப்போகிறோம். இதை வரைந்தவர் – ஹெரால்ட் மைக்கேல்ஸன் (Harold Michelson). இவைகள், மேலே நாம் பார்த்த சிடிஸன் கேன் திரைப்படத்தின் ஸ்கெட்ச்கள் போலவே சற்றே moodyயாக இருப்பதை உணரலாம். இவைகளைப் பார்த்தால், ஒரு ஒளிப்பதிவாளருக்கு தேவையான ஃப்ரேமிங் கண்டின்யுட்டியை இவை எப்படி விளக்குகின்றன என்பது தெரியும். தேவையான லென்ஸ்கள், அந்தக் காட்சியில் இடம்பெறும் விஷயங்கள், அந்த காட்சி எடுக்கப்படும் இடம், காம்போஸிஷன் போன்றவைகளை இந்த துடிப்பான ஸ்டோரிபோர்ட்கள் துல்லியமாக விளக்குகின்றன. பள்ளியிலிருந்து ஓடும் குழந்தைகளை பறவைகள் வெறிகொண்டு தாக்குவதை விளக்கும் காட்சியின் ஸ்டோரிபோர்ட்கள் இவை.

இந்தப் படத்துக்கு ப்ரொடக்‌ஷன் டிஸைனராக வேலை செய்தவர், ராபர்ட் பாய்ல் (Robert Boyle). இவர், ஹிட்ச்காக்குடன் 1942லிருந்து Saboteur, Shadow of a Doubt, North by Northwest, The Birds & Marnie ஆகிய ஐந்து படங்களில் வேலை செய்திருக்கிறார். அவர், ஹிட்ச்காக்கின் தெளிவான திட்டமிடுதலை உறுதி செய்கிறார். கூடவே, தன்னுடன் வேலைசெய்யும் திறமைவாய்ந்த நபர்களின் யோசனைகளையும் ஏற்று செயல்படும் ஒரு இயக்குநராகவும் ஹிட்ச்காக் இருந்திருக்கிறார் என்பது இவரது கருத்துகளால் தெரிகிறது. The Birds படத்தில், படப்பிடிப்புக்கு முன்னர், ஒவ்வொரு ஸீனையும் திட்டமிடும் மீட்டிங்களின் மூலம் இவர்கள் அனைவரும் சந்தித்துக்கொண்டனர். இந்த சந்திப்புகளில், ஹிட்ச்காக் சிலசமயம் மிக மேலோட்டமான சில ஸ்கெட்ச்கள் மூலம் ஒரு ஸீக்வென்ஸை விளக்க தலைப்படுவார். ஆனால், அதேசமயம் இவர்கள் எல்லாரும் கூடிப்பேசி ஒவ்வொருவரின் யோசனைகளையும் மேலும் செம்மைப்படுத்தும் மீட்டிங்களாகவே இவை இருந்தன. ஒவ்வொரு ஸீனைப் பற்றியும் பொதுவான ஒரு திட்டம் இந்த மீட்டிங்களால் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் பாய்ல், ஸ்டோரிபோர்ட்கள், செட் டிஸைன்கள், காஸ்ட்யூம்கள், ஸ்பெஷல் எஃபக்ட்கள் ஆகியவற்றை மேற்பார்வை செய்யத் துவங்குவார். சிலசமயம் தனது ஸ்கெட்ச்களையே கூட பாய்ல் ஸ்டோரிபோர்ட்களுக்கும் செட்களுக்கும் வழங்குவதுண்டு. இருந்தாலும், பொதுவாக ஸ்டோரிபோர்ட் ஆர்டிஸ்ட்களே பெரும்பாலான வேலைகளை செய்தனர்.

Click the image to see larger


Click the image to see larger


அடுத்த அத்தியாயத்தில், ஸ்டோரிபோர்ட்களை தொடருவோம். வேறுசில உதாரணங்களையும் பார்ப்போம்.

தொடரலாம்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </