கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  அறிமுகம் TS கட்டுரைகள் TS சிறுகதைகள் TS நூல்கள் TS நேர்காணல்
 
தமிழ் ஸ்டுடியோவின் தொடர் செயல்பாடுகள்
-----------------------------------
 
குறும்பட வட்டம்

ஓ காதல் கண்மணி - அடிமை விலங்கை ஆராதிக்கும் வியாபாரம்

தன்னுடைய இத்தனை ஆண்டுகால திரைப்பட அனுபவத்தில் மணிரத்னம் ஏதேனும் ஒரு திரைப்படத்தை நேர்மையான கருத்தியலோடு எடுத்திருக்கிறாரா என்றால் இல்லை என்பதுதான் கசப்பான உண்மையாக இருக்கிறது. ஒரு நேர்காணலில் தான் எதற்கு தீர்வு சொல்லமுடியாது என்று சொல்லியிருந்தார். ஆனால் மணியின் ஒவ்வொரு படத்திலும் எல்லாவற்றிற்கும் அவரால் ஒரு தீர்வை முன்வைக்க முடிகிறது.

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

போர்களத்தில் ஒரு பூ - தடையை தகர்ப்போம்..

இலங்கை ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் வாழ்வை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட "போர்க்களத்தில் ஒரு பூ" என்கிற படத்திற்கு தணிக்கை வாரியத்தின் மண்டல தலைவர் & நடிகர் எஸ்.வி. சேகர் தணிக்கை சான்றிதழ் தர மறுத்திருக்கிறார். இலங்கை இந்தியாவின் நட்பு நாடு, இந்த படத்திற்கு அனுமதி கொடுத்தால் இலங்கை நாட்டுடனான நட்பு பாதிக்கப்படும் என்கிற வாதத்தையும் முன்வைத்திருக்கிறார்.

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நிழல் நாயகன் எப்படி நிஜ நாயகன் ஆகிறான்?

வேறெந்த கலை மீதும் படியாத முதலீட்டைக் கோரும் கலை என்கிற மாயபிம்பம் சினிமா மீது மட்டும் படிந்தது ஏன்? மற்ற எல்லாக் கலைகளுக்கும் குறிப்பிட்ட பார்வையாளர்கள் மட்டுமே இருப்பார்கள். ஆனால் சினிமாவிற்கு எல்லா மக்களும், சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லாருமே பார்வையாளர்களாக இருக்கிறார்கள். நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அதன் முதலீடும் அதிகமாகத்தான்....

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரஞ்சித்தும், ரஜினியும்...

கமல்ஹாசனோ, ரஜினியோ ஒருபோதும் பெரிய ஹீரோக்கள் என்கிற கட்டுடைப்பு செய்து, கதையின் மாந்தர்கள் என்கிற நிலைக்கு வரவே முடியாது. தமிழ் சினிமாவில் புதிய அலை என்று இன்றுவரை உருவாகவே இல்லை. புதிய அலை போன்ற இயக்கங்களின் தோற்றவாய்க்கூடத் தெரியாமல், அதன் பெயரை அனாயசமாக பலரும் பயன்படுத்துவதை பார்த்தால் வேதனையாக இருக்கிறது. தமிழில் எப்போதும் புதிய வியாபார அலைதான் தோன்றும்.

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிந்தனை மரபு…

திராவிட இயக்கம் நியாயமாக ஒரு உறுதியான சிந்தனை மரபை இங்கே தோற்றுவித்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில், ஆட்சி அதிகாரத்தை நோக்கி பயணிக்கும் யாராலும், அப்படியான உறுதியான சித்தாந்தங்களுடன் கூடிய ஒரு சிந்தனை மரபை ஒருபோதும் தோற்றுவிக்க முடியாது. காந்தியில் தொடங்கி, பெரியார் வரை ஆட்சி அதிகாரத்திற்கு செல்லாமல், சமூக மாற்றத்தை நோக்கி செயல்பட்ட....

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Lootera – சினிமாவின் மொழி

இந்த படம் பற்றி எழுதுவதற்கு முன்னமே மனதில் பட்டாம்பூச்சி பறக்கிறது என்று கவிதை பூர்வமாக எதையாவது சொல்ல வேண்டும்போல் இருக்கிறது. அத்தனை பெரிய ஆச்சர்யத்தை, சிலாகிப்பை நேற்று பார்த்த ஹிந்திப் படமான Lootera கொடுத்திருக்கிறது. அத்தனை பெரிய கதைக்களம் இல்லை. கருத்தியல் பூர்வமான அணுகுமுறை இல்லை (கருத்தியல் பற்றி....

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

With you Without you - ஒரு களப்பணியாளனின் நேரடி அனுபவம்...

"The Gentle Creature", குறுநாவலின் திரைவடிவங்கள். இந்த குறுநாவல் மனிதனின் ஆழ்மனதில் இருக்கும் காதல், பொருளாசை, அவசர உலகின் எதார்த்த நிகழ்வுகள் போன்றவற்றை மிக சிறப்பாக உணர்வுகளால் வடித்திருக்கும். இந்த நாவலின் மேல் இருந்த கிறக்கமும், முன்னமே இருபெரும் கலைஞர்களின் கேமராமொழியால் பார்த்து வியந்த கதையை,.....

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Court - இந்திய நீதித்துறையின் அசடுகள்

சினிமா என்பதே காட்சி ஊடகம் என்று சொல்லிக்கொண்டிருந்தாலும், மிக முக்கியமாக உரையாடல் மூலம் சொல்ல வேண்டிய கதையை, அல்லது தர்க்கப்பூர்வமான சம்பவங்களை எப்படி சினிமாவாக மாற்றுவது என்பதற்கு மிக சிறந்த உதாரணம், கோர்ட் என்கிற மராத்திய திரைப்படம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்தை மூலமாக வைத்துதான் நகர்கிறது.

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அசுரகணம் – அலைந்து திரியும் மனித மனம்…

சம்பத்தின் இடைவெளி நாவலில் வரும் “தினகரன்”, கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம் நாவலில் வரும் “கணேஷன்”, காசியபனின் அசடு நாவலில் வரும் “கணேஷன்”, அல்பேர்ட் காம்யுவின் outsider இல் வரும் மெர்சோ போன்ற எல்லா கதாபாத்திரங்களும் எனக்கு தெரிந்து ஏதோ ஒரு புள்ளியில்...

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வேற்றுமொழித் திரைப்படங்களை பார்க்கும்போது சப்-டைட்டில் தேவையா?

சப்-டைட்டில் இருக்கிற படங்களைப் பார்க்கும்போது நமது கவனம் முழுவதும் சப்-டைட்டிலை நோக்கியே இருக்கும். அதை படித்துக் கொண்டே காட்சிகளையும், மற்ற முக்கியமான விசயங்களையும் கோட்டை விட்டுவிடுவோம். மிக முக்கியமாக வேற்றுமொழித் திரைப்படங்களை பார்த்துக்கொண்டிருக்கும்போது, சப்-டைட்டிலை...

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

With you Without You (பிறகு) - பிரசன்னா விதானகே

பிரசன்னா விதானகேவின் இயக்கத்தில் "பிறகு" (With you without you) என்று மீண்டுமொருமுறை தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல் உயிர்பெற்றிருக்கிறது. ராபர் ப்ரெசன், மணி கவுல் இருவரின் திரைப்படத்திலும் இல்லாத ஒரு நெருக்கத்தை இந்த திரைப்படத்தில் உணர முடிந்தது. காரணம், இந்த திரைப்படம், என்னுடைய மொழி பேசும், இனக்குழுவை பற்றிய அரசியலை பிரதானப்படுத்தியிருக்கிறது....

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Ship of Theseus – தத்துவார்த்தங்களின் ஆத்மா….

மருத்துவ ஆராய்ச்சி என்கிற பெயரில் விலங்குகளுக்கு இழைக்கப்படும்
அநீதிகளை தட்டிக்கேட்கும் சாது ஒருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழலில் அதை கடுமையாக மறுத்து, உயிர் வேதனையை அனுபவித்து, மரணத்தில் வாசலில் சஞ்சாரம் செய்து, தான் வாழ்தலில் இருக்கும் சுவாரசியத்தை உணர்ந்துக்கொள்ளும் அடுத்த...

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அஸீஸ் பே சம்பவம் – வாழ்வியலை தரிசிக்க செய்யும், நிகழ்கால படைப்பு.

ஒரு இசைக்கலைஞனின் பல்வேறு பருவங்களை, பல்வேறு என்ன ஓட்டத்தை ஒரு நாவலில் அதுவும் 95 பக்கங்களில் சொல்ல முடிந்திருக்கிறது. பல இடங்களில் வார்த்தைகளை அப்படியே காட்சியாக நமக்குள் உருவாக்கம் செய்துக் கொள்ள முடிகிறது. இந்த நாவல், வார்த்தைகளை தாண்டி, காட்சி படிமங்களாக சில இடங்களை நமக்கு விளக்கி செல்கிறது.

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சினிமா வியாபாரம்

கூத்தில் கொஞ்சம் கலையம்சமும், இருந்தால் நன்றாக இருக்கும் என்று கலைஞர்களை நோக்கி நேரடியாக நாம் சொல்லலாம். அதை அவர்களும், உணர்ந்து ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கலை இங்கே விற்பனை பொருள் அல்ல. ஒரு நாட்டின் சொத்து. ஒரு சமூகத்தின் அடையாளம். கலாச்சார விருட்சத்தின் வேர்.ம்.

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முள்ளும் மலரும் – முள்ளில் மலர்ந்த மலர்...

காளி கதாப்பாத்திரத்திற்கு கை போனபிறகு, அவனது தங்கையை சந்திக்க வரும் அந்தக் காட்சியில், பெருக்கெடுத்து ஓடும் பாசப்பிணைப்பில், பக்கம் பக்கமாக வசனம் பேசியிருக்கலாம். ஆனால் அப்படி எதுவுமில்லாமல், தங்கை தன்னுடைய அண்ணன் கையை லேசாக விலக்கி பார்த்து, அவன் வேதனையில் பங்குக்கொள்ளும் அந்தக் காட்சி, தமிழ் சினிமாவின் வசன அத்தியாயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியை ஏற்படுத்தியிருக்கும்.

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நகைச்சுவை அபத்தங்கள்

தொலைக்காட்சி நிகழ்ச்சியில், எல்லோரையும் கலாய்த்துக் கொண்டும், எதையாவது உளறிக்கொண்டும் இருந்தவர்களை சினிமாவில் அறிமுகம் செய்து, அவர்களை அனாவசியமாக வளர்த்துவிட்டுக் கொண்டிருப்பது மிக பெரிய ஆபத்தான செயல். போராட வேண்டும் என்கிற குணத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க கூடியது இப்படியான கேலியும், கூத்தும். இதற்கான விளைவை இந்த சமூகம் அறுவடை செய்யப்போகும் காலம் வெகுதொலைவில் இல்லை.

  மேலும் படிக்க
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை எக்மோரில் உள்ள ஜீவன ஜோதி அரங்கில் நடைபெறும். இந்த இடம் கன்னிமாரா நூலகம் எதிரில் உள்ளது.  
   
---------------------------------  
பௌர்ணமி இரவு
 
ஒவ்வொரு பௌர்ணமி இரவும் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தின் மொட்டை மாடியில் திரைப்படங்கள் திரையிட்டு இரவு முழுக்க விவாதம் நடைபெறும்.  
   
லெனின் விருது
 
தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று சுயாதீனத் திரைப்படக் கலைஞர்களுக்காக படத்தொகுப்பாளர் பீ.லெனின் அவர்கள் பெயரில் விருது வழங்கி வருகிறது.  
---------------------------------  
 
---------------------------------  
பாலு மகேந்திரா விருது  
தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் மே 19ஆம் தேதி குறும்படக் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக இயக்குனர் பாலு மகேந்திரா அவர்கள் பெயரில் விருது வழங்கி வருகிறது.  
     
  ---------------------------------  
  ஒளிப்படத் தொகுப்பு  
  தமிழ் ஸ்டுடியோ சார்பாக நடக்கும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு. இந்த இணைப்பில் பெரும்பாலான நிகழ்வுகள் சார்ந்த புகைப்படங்களை பார்க்கலாம்.  
     
© காப்புரிமை: அருண் @ தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio